பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 (a) செயின்ட் ஜார்ஜ் கோட்டை கெஜட்டில் வெளி யிடப்பட வேண்டும். தமிழில் உள்ள அறிவிப்பின் நகல் ஒன்று சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்தின் முக்கிய மான ஓர் இடத்திலும் கிராமத்தில், அல்லது நகரங்களில் உள்ள சாவடிகளிலும் ஒட்டி வைக்க வேண்டும். (b) காலக்கிரமத்தில், அது ஜில்லா கெஜட்டில் ஆங்கி லத்திலும், தமிழிலும் வெளியிடப்பட வேண்டும். 6. இந்த விதிகளில் மேற்படி சட்டம்’ என்பது, 1958ஆம் ஆண்டு சென்னே பஞ்சாயத்து சட்டம் என்று பொருள். 24. பதவியிலிருந்து வெளியேறுபவர் களிடமிருந்து பஞ்சாயத்துச் சொத்துக்களை ஏற்றுக்கொள்ளுதல் (ப. ச. 182, (3)]. விதி பஞ்சாயத்துச் சட்டத்தின் 182-வது பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவின் காரியங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகாரி, விசாரணை அதிகாரம் வகிக்கும் டெபுடி (துணை) பஞ்சாயத்து அதிகாரி ஆவார். - - 25. பஞ்சாயத்து அலுவல்களில் உள்ளவர்கள் பற்றிய விதி, ஒழுங்கு முறை (ப. ச. 58, ப. ச. 59, ப. ச. 60.) விதிகள் பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் செய்துள்ள எந்த விதியும் அல்லது நடை முறையும், பஞ்சாயத்தின் யாராவது ஒரு அலுவலர் அல்லது ஊழியர் விஷயத்தில் அல்லது பஞ்சா யத்தில் பணிபுரிய முன்வரும் யாரேனும் ஒருவர் விஷயத்தில், தங்களுக்கு நியாயம் என்று தோன்றுகிற வகையில் நடவ் டிக்கை எடுக்க அரசாங்கத்துக்குள்ள அதிகாரத்தை வரை யறுப்பதாகவோ, மட்டுப்படுத்துவதாகவோ கருதப்படக் கூடாது,