பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 சார்பில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஏற்கக் கூடாது. தமது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒரு உறுப் பினரை மேற்சொன்ன நன்கொடை, உதவித் தொகை, அல்லது பரிசைப் பெற அனுமதிக்கவும் கூடாது. (2) அரசாங்கத்தாரின் பொது அல்லது விசேஷ உத்தரவுகளின் பிரிவுகளுக்கு ஏற்ப, பஞ்சாயத்தின் ஒர் அலுவலர் அல்லது ஊழியர், மலர்கள், பழங்கள், அல்லது அதைப் போன்ற சொற்ப மதிப்புடைய பொருள்களே அன் பளிப்பாக ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால், இத்தகைய பரிசுகள் அளிப்பதை பஞ்சாயத்தின் அலுவலர்களும், ஊழியர் களும் கூடிய வரையில் ஊக்குவிக்கக் கூடாது. - (3) அரசாங்கத்தாரின் பொது அல்லது விசேஷ் உத்தரவின் பிரிவுகளுக்கு உட்பட்டு, பஞ்சாயத்தின் ஒர் அலுவலர் அல்லது ஊழியர், தமக்கு நெருங்கிய நண்பரிட மிருந்து, திருமணப் பரிசு ஒன்றைப்பெறலாம், அல்லது தமது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒரு உறுப்பினரை அவ்வாறு பரிசைப் பெற அனுமதிக்கலாம். பரிசின் மதிப்பு, சூழ்நிலையைப் பொறுத்து நியாயமாக இருக்க வேண்டும். பஞ்சாயத்தின் அலுவலர்களும், ஊழியர்களும் தமது நண்பர்கள் அத்தகைய பரிசுகள் கொடுப்பதைக் கூடிய வரையில் ஊக்குவிக்கக்கூடாது. மேற்சொன்னவாறு பரிசு பெற்றதைக் குறித்து மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் நிர்வாக அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். பெற்றுக் கொண்ட பரிசை, பரிசு கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று நிர்வாக அதிகாரி உத்தர விட்டால் பரிசை அவ்வாறே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். (4) பஞ்சாயத்தின் அலுவலர் அ ல் ல து ஊழியர் பரிசை நிராகரிப்பதல்ை, பரிசு கொடுப்பவருக்கு மன வருத் தம் ஏற்படுவதாக இருந்தால், அவர் அந்தப் பரிசை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பஞ்சாயத்து வேறு விதமாகக் கட் டளேயிட்டால் அன்றி, மற்றபடி அந்தப் பரிசை பஞ்சாயத் துக்கே அவர் கொடுத்துவிட வேண்டும். (5) அரசாங்கத்தாரின் பொது அல்லது விசேஷ உத்தரவின் பிரிவுகளுக்கு ஏற்ப பஞ்சாயத்தின் மருத்துவ அதிகாரி அல்லது கால்நடை மருத்துவ அதிகாரி அவரது சேவைக்காக யாரேனும் ஒரு நபர் அல்லது நபர்கள் III–4.