16 பஞ்சாயத்துச் சட்டம் 15-வது பிரிவுப்படி, ஒரு கிராமப் பஞ்சாயத்து அல்லது பட்டணப் பஞ்சாயத்தில், பிற்பட்ட வகுப்பினர் எவ்வளவு பேர் வசிக்கிரு.ர்கள் என்பதைக் கணக்கு எடுத்து, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, எத்தனை ஸ்தானங்களை ஒதுக்குவது உசிதம் என்று தோன்றுகிறதோ, அத்தனை ஸ்தானங்களை ஒதுக்கி, அதை ஓர் அறிக்கை மூலம் இன்ஸ் பெக்டர் வெளியிடுவார். 14. ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களுக்கு, அங்கத்தினர் கள் தேர்ந்தெடுக்கப்படுவார்களா ? அல்லது பொறுக்கி எடுக்கப்படுவார்களா ? எத்தனை பேர் ? - பஞ்சாயத்து அங்கத்தினர்களைப் போல், ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களுக்கும் அங்கத்தினர்கள், தேர்தல் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள்தான். பொறுக்கி எடுக் கப்படுவதில்லை. ஆனால் எத்தனை அங்கத்தினர்கள் என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டருடையது. 15. ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களைத் தவிர்த்து இதர பொது ஸ்தானங்களில், பிற்பட்ட வகுப்பினர், தேர்தலில் போட்டியிடலாமா ? எந்தப் பஞ்சாயத்திலே ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஸ்தானம் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ, அந்தப் பஞ்சாயத்திலே நடைபெறும் தேர்தலில், ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர் கள் பொது ஸ்தானங்களிலும் போட்டியிடலாம். 16. அங்கத்தினர்களால், கூட்டு அங்கத்தினரைச் சேர்த்துக் கொள்வதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா ? - சட்டத்தில் அதற்கான பிரிவு இருக்கிறது. 17. எந்த அடிப்படையில், எத்தனே கூட்டு அங்கத் தினர்களை சேர்த்துக் கொள்ளலாம் ? ஒரு பஞ்சாயத்துக்குப் பெண் அங்கத்தினர்கள் எவருமே தேர்ந்தெடுக்கப் பெற வில்லையானுல், பஞ்சாயத்துச் சட்டம் 15-(4) பிரகாரம், வாக்காளர் பட்டியலில், பெயர் காணப்படும் பெண் ஒருவரை அங்கத்தினராக சேர்த்துக் கொள்ளலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/53
Appearance