பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தகாதது என்று நினைத்தால், அந்த வேலேயை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்லது அந்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று அவருக்குக் கட்டளே யிடலாம். (3) (a) கல்விப் பிரச்னைகள் குறித்து வானெலியில் பேசுவது விஷயமாக, கலெக்டரின் முன் அனுமதியின்றி பஞ்சாயத்தின் அலுவலர் அல்லது ஊழியர் எந்த ஒரு விஷ யத்தைப் பற்றியும் வானெலி நிலேயத்திலிருந்து பேசக் கூடாது. ஒரு விஷயத்தில் அவ்வாறு செய்வது விரும்பத் தக்கது என்று கலெக்டர் கருதில்ை, அதை அவர் அரசாங் கத்தாரின் முடிவுக்காக அனுப்ப வேண்டும். (b) பஞ்சாயத்தின் அலுவலர் அல்லது ஊழியர் வானெலி மூலம் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டால், அல்லது வானெவி மூலம் சொற் பொழிவு நிகழ்த்த விரும்பில்ை, அவர் தம் அதிகாரிகள் மூலம் தாம் பேச விரும்பும் விஷயத்தை கலெக்டருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் பேச விரும்பும் விஷயம் அவரது அலுவலகக் கடமைகளுடன் நேரடியாகவோ மறைமுக மாகவோ தொடர்புள்ளதாயிருந்தால், அல்லது கலெக்டர் அவருடைய பேச்சு விவரம் முழுவதையும் அனுப்ப வேண்டும் என்று கோரில்ை, அவரது பேச்சின் முழு விவரத்தை கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். கலெக்டரின் அனுமதி பெற்ற பிறகே வானெலியில் பேச வேண்டும். - - (c) பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர், வானொலி யில் இசை நிகழ்ச்சிகளில் அல்லது இதர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பற்றி (தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளே அல்லது கிராமபோன் ரிகார்டுகளே ஒலிபரப்புவது உட்பட) (a), (b) பகுதிகளில் கண்டுள்ள பிரிவுகள் அவசியமான மாறுதல்களுடன் பயன்படும். - 7. ஒப்பந்தக்காரர்களுடன் பணம் சம்பந்தமான தொடர்பு பஞ்சாயத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் பஞ்சாயத்தின் ஒப்பந்தக்காரர்கள் அல்லது பஞ்சாயத்தின் கீழ் செயலாற்றும் ஏதாவது ஒரு துறையுடன் தொடர்புள்ள வேறு யாரேனும் ஒரு நபருடன் பண விஷயமாக எந்த விதமான விவகாரமும் வைத்துக் கொள்ளக் கூடாது.