${} இடையூறு விளைவிப்பதற்காகத் தலையிடக்கூடாது. அல்லது தம்முடைய செல்வாக்கை உபயோகிக்கக்கூடாது. மேலும் அவர் ஏதேனும் ஒரு தேர்தல் கட்சி இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது. அல்லது அதற்கு பொருள் உதவி எதுவும் வழங்கக் கூடாது. ஆல்ை, பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவருக்கு, அத்தகைய ஒரு தேர்தலில் வாக்களிக்கத் தகுதியிருந்தால், அந்த உரிமையை அவர் பயன்படுத்தல்ாம். ஆல்ை, அந்த உரிமையை அவர் பயன்படுத்தப் போகும் முறையைப்பற்றி கூடியவரையில் குறிப்பு எதையும் வெளியிடு வதைத் தவிர்க்க வேண்டும். முழுநேர அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் மட்டுமே இந்த விதி பயன்படும். 14. அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளுதல் பஞ்சாயத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும், அரசாங்கத்தாரின் பொது அல்லது விசேஷ உத்தரவுக்கு உட்பட்டு, இந்திய நாட்டில் அல்லது இந்திய நாட்டு விவ காரங்களுக்குத் தொடர்புள்ள ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது. பொருள் உதவி செய்யக்கூடாது அல்லது எந்த விதத்திலும் உதவி புரியக்கூடாது. ஒர் அலுவலர் அல்லது ஊழியர் ஈடுபட உத்தேசித்துள்ள ஏதாவது ஒரு நடவடிக்கை இந்த விதியை மீறுவதாக அமையுமோ என சந்தேகம் எழும் விஷயத்தில், அவர் அதைப்பற்றி நிர்வாக அதிகாரி மூலமாகக் கலெக்ட் ருக்கு அறிவிக்க வேண்டும். அவர் செய்யும் தீர்மானம் முடிவானதாகும். - : குறிப்பு.-ஓர் அலுவலர் அல்லது ஊழியர் மேற்கண்ட செயல்களுக்கு உடந்தையாக இருந்தாலும், தேச விசுவிச மில்லாமல் பேசிலுைம் வேலையிலிருந்து நீக்கப்படுவார். 15. அலுவலர்களும் ஊழியர்களும் தங்களது குடும்பத்தின் செயல்களுக்குப் பொறுப்பு பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியரின் மனேவி அல்லது அவருடன் வசிக்கும் அல்லது ஏதாவது ஒரு வகை யில் அவரைச் சார்ந்துள்ள, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் விதியை மீறும் விதத்தில் செய்த
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/537
Appearance