54 22. அரசாங்கத்தின் கொள்கை அல்லது. நடத்தையைப்பற்றி விவாதித்தல் பஞ்சாயத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் ஒரு பொது இடத்தில் அல்லது ஒரு சங்கத்தில் அல்லது சபையில் ஏதேனும் கூறுவதன் மூலம், எழுதுவதன் மூலம் அல்லது மற்றபடி, மத்திய அரசாங்கத்தினர், மாநில அரசாங்கத்தினர், பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனி யன் கவுன்சில் அல்லது நகராட்சி மன்றம் பின்பற்றும் ஒரு கொள்கை அல்லது எடுத்த நடவடிக்கைபற்றி விவாதிக் கவோ, விமர்சனம் செய்யவோ கூடாது. ஆனால், இந்த விதியில் கண்டது எதுவும் கீழ்க்கண்ட வற்றைத் தடை செய்வதாகக் கருதக்கூடாது: (1) பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர், பஞ் சாயத்துகளின் அலுவலர்கள்-ஊழியர்களின் தனிப்பட்ட கூட்டத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அவர்களுடைய சொந்தச் சங்கத்தில் மேற்படி அலுவலர்கள் அல்லது ஊழி யர்கள் தனித்தனியாகவோ பொதுவாகவோ, பாதிக்கப்பட் டுள்ள விஷயங்கள் பற்றிய விவாதங்களில் பங்கெடுத்தல். (2) பஞ்சாயத்து பொது அல்லது தனிப்பட்ட கூட்டத் தில், மாநில அரசாங்கத்தின், பஞ்சாயத்து யூனியன் கவுன் சில், பஞ்சாயத்து அல்லது நகராட்சி மன்றத்தில் ஏதாவது ஒரு கொள்கையை அல்லது நடவடிக்கையை ஆதரித்து விளக்கிப் பேசுதல்; மேற்படி கொள்கையை அல்லது நட வடிக்கையைப்பற்றிய தவருண எண்ணங்களேயும், தவருன விளக்கங்களேயும் நீக்குவதற்காகவும், மேலே சொன்ன கொள்கையைத் திறமையாக நிறைவேற்றுவதற்காகவும் அவர் அவற்றை ஆதரித்தும் விளக்கியும் கூற வேண்டும். விளக்கம்-மாநில அரசாங்கத்தின், மத்திய அரசாங்கத் தின் ஏதாவது ஒரு கொள்கை அல்லது நடவடிக்கையை அவர்களுக்குப் பொருத்தமாகவும், அவசியமாகவும் தோற்று கிறபடி வெளியிட வேண்டும் அல்லது விளக்க வேண்டும் என்று பஞ்சாயத்து அலுவலருக்கு அல்லது ஊழியருக்குக் கட்ட8ளயிடுவதை, இந்த விதியில் கண்டது எதுவும் வரை யறுப்பதாகவோ, குறைப்பதாகவோ பொருள் கொள்ளக் கூடாது.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/541
Appearance