59 10. எந்த முறையில், என்ன காரியத் துக்காக மேற்படி சொத்து அடை யப்பெற்றது என்பது. 11. மேற்படி சொத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது ஊழியருக்குள்ள பாத்தியதையின் தன்மை. 12. குறிப்புகள். 28. ஒரே அலுவலர் அல்லது ஊழியரை பொதுவில் நியமித்தல் (ப. ச. 59.1 விதிகள் 1. கலெக்டர், அவசியம் ஏற்படும்போது இரண்டு பஞ்சாயத்துகளுக்கும் அல்லது அனேத்துக்குமாக ஒரே தன்மையுள்ள அதிகாரங்களேச் செலுத்தக்கூடிய அல்லது கடமைகளே நிறைவேற்றுகிற நிர்வாக அதிகாரி அல்லது ஓர் அலுவலர் அல்லது ஊழியரை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சாயத்துகள் நியமிக்குமாறு உத்திரவிடலாம். ஆனால், கலெக்டர், பொதுச் சுகாதார நிறுவனங்களே யொட்டிய திட்டங்கள் சம்பந்தமாய், பொதுச் சுகாதார டைரக்டரைத் கலந்தாலோசிக்க வேண்டும். 2. பஞ்சாயத்துகள் வருமானத்தை ஒட்டியும், அலுவ லர் அல்லது ஊழியர் செய்து முடித்த அலுவலேப் பொறுத்து அல்லது இது காரியமாக கலெக்டர் பொருத்தமெனக் கருது கிற வேறு புள்ளி விவரத்தைக்கொண்டு, நிர்ணயிக்கும் விகி தத்திலும் முறைப்படியும், அலுவலர் அல்லது ஊழியர் லீவு, சம்பளத்தின்மீது அல்லது எதிர்காலச் சேமிப்பு நிதிக்குக் கொடுக்கத்தக்க பங்குடன் சேர்த்து, அலுவலர் அல்லது ஊழி யருக்குக் கொடுக்கத்தக்க சம்பளம், படிகளுக்கு, சம்பந்தப் பட்ட பஞ்சாயத்துகள் பொறுப்பு ஏற்க வேண்டும். 3. கலெக்டர், பஞ்சாயத்துச் சட்டத்தின் 61-வது பிரிவில் சொல்லிய அதிகாரங்களேச் செலுத்தும்படி சம்பந் தப்பட்ட பஞ்சாயத்துகளின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவ ருக்கு உத்தரவிடலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/546
Appearance