18 பஞ்சாயத்து அங்கத்தினர்களைப் போலவே, தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள், பஞ்சாயத்துச் சட்டம் 17-வது பிரிவுப்படி இன்ஸ்பெக்டர் மூன்று மாதங்களைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். 25. தலைவர், துணைத் தலைவருக்குச் சம்பளம் அல்லது சன்மானம் கொடுக்கப்படுமா? பஞ்சாயத்திலிருந்து அவர்களுக்குச் சம்பளமோ அல்லது சன்மானமோ கொடுக்கப்படுவதில்லை. 26. அங்கத்தினர்களுக்கு, பிரயாணப் படி அல்லது இதர படித்தரங்கள் ஏதாவது கொடுக்கப் படுமா ? பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் அங்கத் தினர்கள், பஞ்சாயத்து அலுவல் காரணமாக பிரயாணம் சென்ருல், பஞ்சாயத்து நிதியிலிருந்து, அரசாங்கம் நிர்ண யித்துள்ள, பிரயாணப் படியைப் பெறலாம். ' பிரயாணப் படி எவ்வளவு-எவ்வாறு தரப்படுகிறது” என்ற விவரம் தனியாக இணைக்கப்பட்டிருக்கிறது.1 27. பஞ்சாயத்தில் எத்தனை கமிட்டிகள் உள்ளன? (ஆங்கிலத்தில், ' கமிட்டி என்று சொல்லப் படும்; தமிழில் ' குழு என்று சொல்லப் படுகிறது! ஒவ்வொரு பஞ்சாயத்தும், நியமனக் கமிட்டி ஒன்றையும், பொதுக் க ச ரி யங் க ளு க் க | ண கமிட்டி ஒன்றையும், அமைக்கலாம். பஞ்சாயத்து, பிரித்துக் கொடுக்கக் கூடிய சில அதிகாரங்களைச் செலுத்தவும், கடமைகளைச் செய்யவும், அலுவல்களை நிறைவேற்றவும் இதர கமிட்டிகளை அமைத்து, அவற்றிடம் ஒப்படைக்கலாம். 28. சட்டபூர்வமான கமிட்டிகள் எத்தனை? பஞ்சாயத்துக்களில் சட்டபூர்வமான கமிட்டிகளே கிடையாது. 29. கமிட்டிகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன? அவற்றின் அங்கத்தினர்கள்:யார்?
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/55
Appearance