பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 11, 2 முதல் 7 வரையிலுள்ள விதிகள், 18-வது விதி ஆகியவற்றின் பிரிவுகளுக்கு உட்பட்டும், அடியிற்கண்ட வரையறைகளுக்கு உட்பட்டும், எதிர்காலச் சேமிப்பு நிதியில் அனுமதிக்கப்பட்டுள்ள கடைநிலை ஊழியர்கள். அவர்கள் மேற்சொன்ன நிதியில் அனுமதிக்கப்படுவதற்கு முன், அவரது ஊழியத்தின் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மாதிச் சம்பளம் கிராஜூயிடியாகப் பெறலாம். மேற்சொன்ன கிராஜுயிடி அவர்கள் சேமிப்பு நிதியிலிருந்து பெறக்கூடிய தொகைகளைத் தவிர அவர் பெறுவதாகும். (a) முதல் ஐந்தாண்டு ஊழியத்திற்காக கிராஜுயிடி அனுமதிக்கப்படமாட்டாது. (b) கிராஜுயிடி எந்த விஷயத்திலும் 20 மாதச் சம்ப ளத்திற்கு மேற்படக்கூடாது. இந்த விதியின்கீழ் அனுமதிக்கப்படும் கிராஜுயிடியை ஊழியர் எதிர்காலச் சேமிப்பு நிதியில் அனுமதிக்கப்படுவ தற்கு முன் அவர் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டும். . . . 12. இந்த விதிகளின் கீழ் கிராஜுயிடியை பஞ்சாயத்து வழங்க வேண்டும். ஆல்ை, கலெக்டரின் எழுத்து மூலமான முன் அனுமதியைப் பெருமல், தொகையைக் கொடுக்கக் கூடாது. 8, 9, 10, 11-வது விதிகளில் விதித்துள்ள விகி தங்கள் அதிக அளவான விகிதங்களாகக் கருத வேண்டும். ஊழியரின் ஊழியம் முழுவதும் திருப்திகரமாக இருந்தாலன்றி, முழு கிராஜூயிடியையும் வழங்க வேண்டியதில்லை. ஊழி யரின் சேவை முழுவதும் திருப்திகரமாக இல்லாவிடில், பஞ்சாயத்து தகுதியெனக் கருதுகிறபடி கொடுக்க வேண்டிய தொகையைக் குறைக்கலாம். 13. கடைநிலை ஊழியர் ஒருவருக்கு வழங்கத்தக்க கிரா ஜூயிடியைக் கணக்கிடுகையில், அவருக்கு 16 வயது பூர்த்தியான பிறகு, அவர் செய்த சேவையைமட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் ; உயர் நிலே ஊழியரின் விஷயத்தில், அவருக்கு 20-வது வயது பூர்த்தியான பிறகு அவர் செய்த சேவையைமட்டும் கணக்கில் கொள்ள வேண்டும். 14. ஒரு பகுதி ஊழியத்தைக் கடைநிலேயிலும், இன்னொரு பகுதி ஊழியத்தை உயர்நிலையிலும், கழித்த ஊழியர் ஒருவர் அடியிற்கண்டவாறு செய்யலாம் :