உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 பட்டணப் பஞ்சாயத்தின் நியமனக் கமிட்டியில், மேற்படி பஞ்சாயத்துத் தலைவரும்; நிர்வாக அதிகாரியும், பஞ்சாயத்து அங்கத்தினர்களிலிருந்து ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கிற ஓர் அங்கத்தினரும் இருப்பார்கள். கி ரா ம ப் பஞ்சாயத்து விஷயத்தில், கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும், அந்தப் பஞ்சா யத்து அங்கத்தினர்களிலிருந்து ஆண்டு தோறும் தேர்ந்தெடுக் கிற இரண்டு அங்கத்தினரும் இருப்பார்கள். இதர கமிட்டி களுக்கு, பஞ்சாயத்து தீர்மானிக்கிறபடி அங்கத்தினர்கள் இருப்பார்கள். 30. கமிட்டிகளின் காலம் எவ்வளவு ? கமிட்டிகள் ஒரு வருஷம் செயல்படும். 31. கிராமப் பஞ்சாயத்தினுள் வசிக்கும் சட்டசபை அங்கத்தினர், பார்லிமெண்ட் அங்கத்தினர், பதவி காரணமாக பஞ்சாயத்து அங்கத்தின ராக ஆவார்களா ? அவர்கள் அங்கத்தினராக முடியாது. 32. இடைக் காலத் தேர்தல் எப்படி நடத்தப்பட வேண்டும்? பஞ்சாயத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் அங்கத்தி னர் பதவியானது தற்செயலாகக் காலியானல் விதிகளின் குறிப்பிட்டுள்ள கால வரைக்குள் அதை நிர்வாக அதிகாரி யானவர் தெரிவிக்க வேண்டும். தேர்தலானது, பஞ்சாயத்து அங்கத்தினர்களின் தேர்தல் விதிகளின்படி நடத்தப்படும். பொதுவாக, பஞ்சாயத்து அங்கத்தினரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஆறுமாதங்களே பாக்கி இருக்குமேயானல் அப்போது தற்செயலாக தேர்தல் எதுவும் நடத்தக்கூடாது. தற்செயலாக ஏற்பட்ட காலி ஸ்தானத்திற்கு தேர்ந் தெடுக்கப்பெற்ற அங்கத்தினர் முந்திய அங்கத்தினர் எந்தக் காலம் வரை பதவி வகிக்கத் தகுதி உடையவராக இருந்தாரோ அந்தக் கால அளவு வரைதான் பதவி வகிக்க வேண்டும்.