77 சேர்ந்த (2), (4) உட்பிரிவுகளின்படி ஒழுங்குபடுத்தி யுள்ளதோ அவற்றைப்பற்றி ஒரு பட்டிய்ல் வைத்து வர, வேண்டும். அதில் புறம்போக்கின் சர்வே எண்கள், எல்லேகள், பரப்பு, எதற்காக உபயோகிக்கப்படுகிறது, ஆதிலுள்ள மரங்கள் ஆகியவைபற்றிய விவரங்கள் : இருக்க் வேண்டும். - இ. பஞ்சாயத்தால், ஏந்தப் புறம்போக்கின் உபயோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதோ அதைப் பார்வையிட கிராமத் தலைவர், தர்ணம், அல்லது ரெவின்யு இலாகாவின் யாராவது பார்வையிடும் அதிகாரி ஆகியோரை எந்த நேரத்திலும் அனுமதிக்க வேண்டும். - - 6. புறம்போக்கின் உபயோகத்திற்காக பஞ்சாயத்து, ஒரு கட்டணம் விதித்து வாங்கலாம். மேற்படி கட்டணம் கலெக்டர்ால் அங்கீகரிக்கப்பட்ட விகிதங்களே அனுசரித்து இருக்க வேண்டும். 7. பஞ்சாயத்து களத்துமேடுகள், வண்டி நிற்கு மிடங்கள், கால்நடைக் கொட்டில்கள், இடுகாடுகள், சுடு காடுகள் ஆகியவற்றைத் துப்புரவான நிலையில் வைத்து வரவேண்டும். இது சார்பாக மாவட்ட சுகாதார அதிகாரி கட்டளேயிடக்கூடியவற்றை நிறைவேற்ற வேண்டும். 8. தோப்புகளே நல்ல நிலையில் வைத்து வருவதற்கும், காற்றடித்து விழுந்துபோன, காய்ந்த அல்லது பழுதான மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்களே நடுவதற்கும் வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் பஞ்சாயத்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 9. தோப்புகளேப் பொருத்தமான நிபந்தனைகளின், பேரில் பஞ்சாயத்துகள் குத்தகைக்கு விடவேண்டும். தோப்புகளில் உள்ள மரங்களின் பலன்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் பஞ்சாயத்துகள் அனுபவிக்கலாம். 10. பஞ்சாயத்துச் சட்டத்தின் 178-வது பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் (XXXV)-வது பகுதியின் கீழ் செய்த விதிகள், பஞ்சாயத்துகள் புறம்போக்கு மரங்களைக் குத்தகைக்கு விடுவ்து, வெட்டுவது, நடுவது ஆகிய வற்றுக்குப் பயன்படும்; அவற்றின் பயனும் மேற்படி பஞ்சா யத்தால் அவ்வப்போது முறைப்படுத்தப்படும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/564
Appearance