81 சட்டத்தின் 87 (1) (b) பிரிவின்படி கட்டிளே ஒன்றைப் பிறப்பிக்கவும் அனுமதி வழங்கலாம். இது விஷயமாக பஞ்சாயத்துடன் மாவட்டக் கெ மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால், அவர் அதற்கான் காரணங்களே எழுதிவைத்து விண்ணப்பத்தை ரத்து செய்ய லாம். அவ்வாறு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவின் நகல் பஞ்சாயத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். 8. பஞ்சாயத்துச் சட்டத்தின் 87 (1) (a) பிரிவில் சொல்லிய நிலங்களில் மரங்கள் நடுவதைப்பற்றி ஒழுங்கு செய்வதற்கு பஞ்சாயத்துச் சட்டத்தின் 178-வது பிரிவைச் சேர்ந்த 2-வது உட்பிரிவின் (xxxw) பகுதியின்கீழ் தயாரித்த விதிகள் தேவையான மாறுதல்களுடன் பயன்படும். 34. பொதுமக்கள் தங்குமிடங்கள், வண்டி நிலையங்கள் முதலியன su. F. 106., i 1. F. 178. (2) xxiii)]. விதிகள் 1. (1) பொது மக்கள் தங்குமிடம் அல்லது வண்டி நிலையம் இவற்றிற்கு பஞ்சாயத்து ஏற்பாடு செய்ய உத்தே சித்தால் அதுபற்றி ரெவின்யு டிவிஷனல் அதிகாரிக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்; அந்த விண்ணப் பத்தில் பின்வரும் விவரங்கள் கண்டிருக்க வேண்டும்: (a) தங்குமிடம் அல்லது வண்டி நிலையம் இவற்றைப் பஞ்சாயத்து கட்டிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ள நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, தரப்பிரிவினே இவற்றுடன் அக்கம் பக்கத்திலுள்ள முக்கிய சாலைகள், நிலங்களைக் குறிப்பிட்டு விளக்கியுள்ள நிலவரைப் படம்; & - και (b) ரெவின்யு டிவிஷனல் அதிகாரி குறிப்பாகக் கேட்டிருக்கும் இதர விவரங்கள். (2) அனுமதி வழங்குவதற்கு முன்பாக, ரெவின்யு, டிவிஷனல் அதிகாரி மோட்டார் வாகனங்களுக்காக முழு. அளவிற்கு அல்லது ஒரளவுக்கு கட்ட உத்தேசித்துள்ள் நிலையங்களின் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பிராந்தியப் போக்குவரத்து அதிகார சபையைக் கலந்தாலோசித்து, அவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/568
Appearance