86 37. இடுகாடு, சுடுகாடு பற்றிய ஏற்பாடு [L. G. 178. (2) (xxxi)] விதிகள் 1. ஒரு பஞ்சாயத்து, தேவையான பிரிவு இல்லா திருக்கும் பட்சத்தில், அதன் சொந்தச் செலவில் சுடுகாடாக அல்லது இடுகாடாக அல்லது மின்சாரத் தகனம் செய்யப் பயன்படும் இடங்களே ஏற்படுத்தலாம்; ஏற்படுத்தவும் வேண்டும்; அந்த இடங்களேப் பயன்படுத்துவதற்கு வாடகைகளேயும் கட்டணங்களேயும் பஞ்சாயத்து வசூலிக்க 6òİTÍr), 2. (1) இடுகாடாக, சுடுகாடாக அல்லது வேறு வகையில் பிரேதத்தை அடக்கம் செய்வதாயுள்ள எந்த இடத்திற்காவது பாத்தியதையுடைய ஒவ்வொரு உரிமை யாளரும் பஞ்சாயத்து சட்டத்தின்படியோ அல்லது 1920-ஆம் ஆண்டு சிென்னே மாவட்டக் கழகங்கள் சட்டத்தின்படியோ அத்தகைய இடம் முன்பே பதிவு செய்யப்படாமலிருந்தால், மேற்படி இடத்தைப் பதிவு செய்து கொள்வதற்காகப் பஞ்சர் யத்து விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும் (2) மேற்படி இடங்களுக்கு உரிய சொந்தக்காரரோ அல்லது நபரோ இல்லே என்று பஞ்சாயத்துக்குத் தெரிய வருமால்ை, மேற்படி பஞ்சாயத்து, அதன் உரிமையைத் தான் எடுத்துக்கொண்டு, அம்மாதிரியான இடத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்; அல்லது ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் அனுமதியின் பேரில் அதை மூடிவிடலாம். - - 3. (1) பிரேதத்தை அடக்கம் செய்வதற்காக எந்தப் புதிய இடமும்-அது தனியாருடையதாக இருப்பினும் அரசாங்கத்தினுடையதாக இருப்பினும், விண்ணப்பத்தின் பேரில் பஞ்சாயத்திடமிருந்து லேசென்ஸ் பெற்றுக்கொண் டால் ஒழிய மற்றபடி, திறக்கப்படவோ, அமைக்கப்படவோ, கட்டப்படவோ அல்லது பயன்படுத்தப்படவோ கூடாது. (2) இலசென்ஸ் கோரிச் செய்யப்படும் மனுவுடன் இல்சென்ஸ் அளிக்கப்படவிருக்கும் இடத்தின் வரைபடம், அது அமைந்துள்ள பகுதி, எல்லே, அதன் பரப்பளவு ஆகியவை அனுப்பப்பட வேண்டும். அத்துடன் லேசென்ஸ் பெறுவதில் சம்பந்தப்பட்ட சொந்தக்காரரின் அல்லது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/573
Appearance