உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. (a) ஒரு வீட்டின் ஆண்டு மதிப்பு அந்த வீட்டினே மாதா மாதம் அல்லது ஆண்டுக்காண்டு நியாயமாய், வாடகைக்கு விடக்கூடிய மொத்த ஆண்டு வாடகை என: கருத வேண்டும். இப்படிச் செய்கையில் அந்த ஆண்டு. வாடகையில் பத்து சத விகிதத்தைக் குறைத்தே கணக்கிட வேண்டும். செப்பனிடும் செலவு, வேறு எக்காரணத்தை, முன்னிட்டேனும் மற்ற செலவுகள் ஆகியவைகளுக்காகவே அவ்வாறு தொகை குறைக்கப்படுகிறது. (b) அடியிற்கண்ட கட்டிடத்தின் விஷயத்தில் அதன் ஆண்டு மதிப்பு அதன் மூலதன மதிப்பில் ஆறு சத விகிதம் எனக் கருதப்பட வேண்டும்: (i) பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் வீடு” என்ற வரையறைக்குள் அடங்குகிற அரசாங்க அல்லது ரயில்வே கட்டிடம்; அல்லது (ii) மேற்கண்ட வரையறைக்குள் அடங்குவதும், சாதாரணமாக வாடகைக்கு விடாத வகையைச் சேர்ந்ததும், மொத்த ஆண்டு வாடகையை மதிப்பிட முடியாதென நிர்வாக அதிகாரி கருதுவதுமான ஏதாவதொரு கட்டிடம். 8. வீட்டுவரி செலுத்தவேண்டிய நபர்கள் (1) வீட்டு வரியை வீட்டுச் சொந்தக்காரர் அர்ை யாண்டு தொடங்கியதிலிருந்து முப்பது நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். - (2) வீட்டின் சொந்தக்காரர் ஒருவர் அந்த வீட் டிற்கு உரிய வீட்டுவரி முழுவதையுமோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அறிவிப்பு சேர்ப்பித்த தேதியிலிருந்து பதினேந்து நாட்களுக்குள் செலுத்தத் தவறில்ை, அல்லது அந்த வரி பன்னிரண்டு மாதங்களுக்கு மேற்படாமல் கட்டப் படாதிருந்தால், அந்த வீட்டை அந்தச் சமயத்தில் அனு போகத்தில் வைத்திருப்பவரை, குறிப்பிட்ட காலத்துக்குள் தொகையைக் கட்டுமாறு நிர்வாக அதிகாரி உத்திரவிட வேண்டும். கால அளவு குறைந்தது பதினேந்து நாட்களா யிருக்க வேண்டும். 4. வீட்டை மாற்றுபவரும், மாற்றிக்கொள்பவரும் மாற்றத்தை அறிவிக்க வேண்டிய கடமை (1) ஒரு வீட்டில் வீட்டு வரி கட்டுவதற்கு முதல் பொறுப் புள்ளவருக்கு அந்த வீடு விஷயமாய் அல்லது அதன் மீது