உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 உள்ள உரிமை மற்ருெருவருக்கு மாற்றப்படும் போதெல்லாம், வீட்டை மற்ருெருவ்ருக்கு மாற்றுபவர், வீட்டு உரிமை மாற்றுப் பத்திரம் நின்றவேற்றப்பட்ட பிறகு அல்லது அது பதிவு செய்யப்படுவதனால் அது பதிவு செய்யப்பட்ட பிறகு, அல்லது பத்திரம் எதுவும் எழுதப்படாவிட்டால் உரிமை மாற்றம் ஏற்பட்ட பிறகு, மூன்று மாதங்களுக்குள் அந்த மாற்றத்தைப் பற்றிய அறிவிப்பு ஒன்றை நிர்வாக அதிகாரிக் குக் கொடுக்க வேண்டும். (2) மேற்குறிப்பிட்ட முதல் பொறுப்புள்ளவர் இறந்து விட்டால், வாரிசு என்ற முறையிலோ மற்றபடியோ இறந்து போனவருடைய உரிமை தமக்கு மாற்றப்படுகிற நபர், இறந்து போனதிலிருந்து ஓராண்டுக்குள் அந்த மாற்றம் பற்றி எழுதிய அறிவிப்பு ஒன்றை நிர்வாக அதிகாரிக்குக் கொடுக்க வேண்டும். (8) இந்த விதியின்கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு, நிர்வாக் அதிகாரி கட்டளையிடக்கூடிய_நமூனப்படி இருக்க வேண்டும். சந்தர்ப்பத்துக்கேற்ப, உரிமை மாற்றிக்கொள் பவர் அல்லது வாரிசு உரிமை அடையப்படுகிற நபர், நிர்வாக அதிகாரி அவ்வாறு செய்ய வேண்டுமென உத்தர விட்டால், உரிமை மாற்றத்தை அல்லது வாரிசு உரிமையை நிரூபிக்கிற தஸ்தாவேஜை நிர்வாக அதிகாரியிடம் கொண்டு வந்து காட்டக் கடமைப்பட்டவராவர். (4) நிர்வாக அதிகாரிக்கு அறிவிப்புக் கொடுக்காமல் அத்தகைய உரிமை மாற்றம் செய்கிறவர் ஒவ்வொருவரும், அவ்வாறு அசட்டை செய்த தல்ை உள்ளாகக்கூடிய மற்ற பொறுப்புடன்கூட, அவர் அந்த மாற்றம் குறித்து அறிவிப்பு கொடுக்கிற வரையில் அல்லது அந்த மாற்றம் பஞ்சாயத் துப் பதிவேடுகளில் பதியப்படும் வரையில் அந்த வீட்டுக்கு விதிக்கப்படும் வீட்டு வரியைக் கட்டுவதற்கும் உட்பட்டவ ராவார். ஆனால், அந்த வரியைக் கட்டுவதற்கு, உரிமை மாற்றம் செய்துகொண்டவருக்குள்ள பொறுப்பை இந்த விதியில் கண்டுள்ளது எதுவும் பாதிக்காது. 5. வீடு காலியாய் இருந்ததை முன்னிட்டு வரி வஜா (1) ஏதாவது ஒரு அரை வருவடித்தில் தொடர்ச்சியான அறுபது நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்டு ஒரு வீடு காலி யாகவே இருந்தால், நிர்வாக அதிகாரி அந்த வீட்டுக் குள்ள வீட்டு வரியைப் பாதிக்கு மேற்படாமல் வஜா