95 செய்ய வேண்டும்; அந்த வஜாவானது. அந்த வீடு அந்த அரை வருஷத்தில் காலியாயிருந்த நாட்களின் விகிதா சாரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். (2) துணை விதி (1)-ன்கீழ் வரி வஜாவுக்காகச் செய்து கொள்ளப்படும் ஒவ்வொரு கோரிக்கையும் வரி வஜா கோரு கிற அரை வருஷத்தில் அல்லது அதற்கடுத்த அரை வருஷத் தில் செய்துகொள்ளப்பட வேண்டும். அதற்குப் பின் மேற் படி கோரிக்கையைக் கொடுக்க முடியாது. (3) (அ) அந்த வீட்டுச் சொந்தக்காரர் அல்லது அவ ருடைய ஏஜெண்ட் கோரிக்கை செய்து கொள்வதற்கு முன் அந்த வீடு காலியாயிருப்பதைக் குறித்து நிர்வாக அதி காரிக்கு அறிவிப்பு கொடுத்திருந்தால் மட்டுமே வரி வஜ்ர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். வரி வஜா செய்வதற் கான கால அளவு மேற்படி அறிவிப்பு சேர்ப்பிக்கப்பட்ட தேதி முதற்கொண்டே கணக்கிடப்படும். (ஆ) அத்தகைய ஒவ்வொரு அறிவிப்பும் அது கொடுக் கப்பட்ட அரை வருஷத்துடன் முடிவடைந்து விடும். அதன் பின் செல்லுபடியாகாது. .ே கட்டிடங்கள் கட்டுதல், இடித்துவிடுதல் பற்றி அறிவிக்க சொந்தக்காரருக்குள்ள பொறுப்பு (1) (a) ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் ஒரு வீடு கட்டப்பட்டால், அல்லது அந்த வீடு மீண்டும் புதுப்பிக் கப்பட்டால், அதன் சொந்தக்காரர். அது குறித்த அறிவிப்பு ஒன்றை அந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட தேதி, மேற்படி வீட்டை அனுபோகத்துக்கு எடுத்துக்கொண்ட தேதி ஆகி யவற்றுள் எது முந்தியுள்ளதோ அந்தத் தேதியிலிருந்து பதி னேந்து நாட்களுக்குள் நிர்வாக அதிகாரிக்குக் கொடுக்க் வேண்டும். (b) அந்தத் தேதி ஒர் அரை வருஷத்தின் கடைசி இரண்டு மாதங்களுக்குள் இருந்தால், மேற்படி சொந்தக் காரர், (a) பகுதியின்கீழ் அறிவிப்பு கொடுத்திருப்பதற்கு உட் பட்டு, அந்த அரை வருஷத்துக்கு அந்த வீடு விஷயமாகச் செலுத்தக்கூடிய வரி முழுவதும் அல்லது சந்தர்ப்பத்துக் கேற்ப அதிகமான வரியை வஜா, செய்யப்படுவதற்கு உரிமையுள்ளவராவார். -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/582
Appearance