உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 (c) அந்தத் தேதி ஓர் அரை அருஷத்தின் முதல் நான்கு மாதங்களுக்குள் இருத்தால், மேற்படி சொந்தக் காரர் (a) பகுதியின்கீழ் அறிவிப்பு கொடுத்திருப்பதற்கு உட் பட்டு, சந்தர்ப்பத்துக்கேற்ப, அந்த அரை வருஷத்துக்கு அந்த வீடு விஷயமாய் செலுத்தத்தக்க வரியில் அல்லது அதிகமான வரியில் பாதி வரையில் வஜா செய்யப்படுவ தற்கு உரிமையுள்ளவராவார். அது, அந்தத் தேதிக்கு முன் அரை வருஷத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி இருக்க வேண்டும். (2) துணை விதி (1)ன் (i) பகுதியில் கண்ட பிரிவுகளே மேற்படி சொந்தக்காரர். எவரேனும் மீறி நடந்தால், அவர் ஐம்பது ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படத் தக்கவராவர். (3) (a) ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் உள்ள ஒரு வீடு இடிக்கப்பட்டால் அல்லது அழிக்கப்பட்டால், அதன் சொந்தக்காரர் குறிப்பிட்ட அறிவிப்பு ஒன்றை நிர்வாக அதிகாரிக்குக் கொடுக்கிற வரையில், அந்த வீடு இடிக்கப்படாமலிருந்தால் அல்லது அழிக்கப்படாமலிருந் தால் அவ்வீட்டுக்குச் செலுத்த வேண்டியதாயிருக்கக் கூடிய வரியை நிர்வாக அதிகாரி விரும்பில்ை மேற்படி சொந்தக்காரர் செலுத்துவதற்கு உட்பட்டவராவார். (b) ஒர் அரை வருஷத்தில், முதல் இரண்டு மாதங் களுக்குள் அந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டு சொந்தக்காரர், அந்த வீடு விஷயமாய் அந்த அரை வருஷத்திற்குச் செலுத்த வேண்டிய வரி முழுவதையும் வஜா செய்யப்படுவதற்கு உரிமையுள்ளவ 毋fügrfr。 (c) அந்த அறிவிப்பு ஒர் அரை ஆண்டின் கடைசி நான்கு மாதங்களுக்குள் கொடுக்கப்பட்டிருந்தால், வீட்டு சொந்தக்காரர், அந்த வீடு விஷயமாய், அந்த அரை ஆண்டுக்குச் செலுத்தத்தக்க வரியில் பாதி வரையில் வஜா செய்யப்படுவதற்கு உரிமையுள்ளவராவார். சந்தர்ப்பத்துக் கேற்ப வீட்டை இடித்த பிறகு, அல்லது அழித்த பிறகு, அந்த அரை ஆண்டில் இருக்கிற நாட்களின் எண்ணிக் கைக்கு ஏற்ற விகிதாசாரப்படி அந்த வஜா இருக்கவேண்டும்.