98. 11. வீட்டு உரிமைப் பதிவு மாற்றம் யாராவது ஒருவர் விண்ணப்பம் செய்துகொள்வதன் மேல், பொதுவாக வரியை மாற்றியமைக்கும் காலத்தில் அல்லது ஒரு பொது மாறுதலுக்கும் அடுத்த பொது மாறுத லுக்கும் இடையில் வரி நிர்ணயப் புத்தகங்களில் வீட்டு உரிமை மாற்றங்களேச் செய்கையில், நிர்வாக அதிகாரி அடியிற் கண்ட பிரிவுகளே அனுசரித்து நடக்க வேண்டும்; அவை: 1. வீட்டுச் சொந்தக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து செய்துகொள்ளும் மாற்றங்கள் உரிமை முழுவதும் மாற்றப்படும் விஷயங்களில் எல்லாம், உரிமை மாற்றிக்கொள்ளும் கட்சிக்காரர்கள் இருவரும் அல்லது அவர்களில் எவராகிலும் விண்ணப்பம் செய்து கொள்வதன்மேல், உரிமை மாற்றத்துக்கு ஏற்ப, சொத்துப் பதிவேட்டினேத் திருத்தி அமைக்கலாம். ஆல்ை, உரிமை மாற்றத்துக்கான விண்ணப்பம் எழுத்து மூலமானதாயிருக்க வேண்டும். அதைச் செய்துகொள்ளும் கட்சிக்காரர் அதில் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அதைத் தபாலில் அனுப் பலாம் அல்லது நேரில் கொடுக்கலாம் அல்லது கிரமமாக அதிகாரம் பெற்ற ஏஜெண்ட் நேரில் கொடுக்கலாம் அல்லது பதிவுத்துறை அதிகாரிமூலம் அனுப்பி வைக்கலாம். அந்த விண்ணப்பத்தை இரு கட்சிக்காரர்களும் செய்திருந்து அவர்களில் ஒருவர் பதிவான சொந்தக்காரராயிருந்தால், கேட்டுக்கொண்டபடி, பதிவேட்டில் மாறுதல் செய்யுமாறு உடனடியாக உத்தரவிடலாம். ஆல்ை மேற்படி கட்சிக் காரர்களில் ஒருவர்மட்டுமே அந்த விண்ணப்பம் செய்து கொண்டிருந்தால், மற்ற கட்சிக்காரருக்கு அதுபற்றி அறிவிப்பு சேர்ப்பிக்க வேண்டும். பதிவான சொந்தக்காரர் அந்த விவகாரத்தில் ஒரு கட்சிக்காரராக இல்லாவிட்டால், பதிவேட்டில் உரிமை மாற்றத்திற்கான விண்ணப்பம் இரு கட்சிக்காரர்களாலும் செய்து கொள்ளப்பட்டிருந்தாலும் ஒரு கட்சிக்காரர் மட்டுமே செய்து கொண்டிருந்தாலும் அந்தச் சொந்தக்காரருக்கும் அது பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்க வேண்டும். அவர் அந்த மாற்றத்தை ஆட்சேபித்தால், சொந்தக்காரர் எனக் கூறிக்கொள்பவர் திருப்திகரமான, சட்டப்படிக்கான சாட்சியம் காட்டிலைன்றி, மற்றபடி மாற்றம் எதையும் செய்யக்கூடாது. கட்சிக்காரர்களில் ஒருவர். மட்டுமே விண்ணப்பித்திருந்து, மற்றவர் அதை
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/585
Appearance