உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99; ஆட்சேபித்தால், அல்லது ஒன்றும் கூருமல் இருந்தால், இரு கட்சிக்காரர்களுக்கும் பல தஸ்த்ாவேஜ் கள் மூலம் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். தஸ்தாவேஜுகள் போதுமானவை யாக இல்லாவிட்டால், கெளரவமான் நபர்களின் அறிக்கை கள், வரி ரசீதுகள் போன்ற மற்ற சாட்சியங்களால் அதைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆட்சேபம் தெரிவித்துக் கொள் வதற்காக ஒரு மாத வாய்ப்பு அளிக்க வேண்டும். அந்தக் கால அளவுக்குள் ஏதேனும் ஆட்சேபனை செய்து கொள்ள்ப் பட்டால், அதைக் குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆட்சேபனை செல்லுபடியாகக் கூடியது என தெரியவந்தா லொழிய, பதிவேட்டில் உரிமை மாற்றம் செய்ய வேண்டும். ' 2. டிக்ரி பெற்றிருப்பவர்களுக்கு உரிமை மாற்றம் சிவில் நீதி மன்ற டிக்ரியை அனுசரித்து, டிக்ரி பெற்றிருப் பவர்களுக்கு அல்லது சிவில் நீதி மன்ற டிக்ரியை நிறை வேற்றும் வகையில் நடத்திய ஏல விற்பனையில், விலக்கு வாங்கியவர்களுக்கு, சொத்து உரிமை மாற்றம் செய்யும் விஷயங்களில், அந்த வழக்கின் கட்சிக்காரர்களில் எவரா கிலும் அல்லது ஏலத்தில் விலக்கு வாங்கியவர்கள் விண் ணப்பம் செய்து கொள்வதன் மேலும், சந்தர்ப்பத்துக்கேற்ப, உறுதி கூறிய டிக்ரி பிரதியை அல்லது விற்பனேச் சான்றிதழ். பிரதியைக் கொண்டு வந்து கொடுப்பதன் மேலும் அதை அனுசரித்து சுவாதீன ஒப்படைச் சான்றிதழ் கொண்டுவந்து கொடுப்பதன் மேலும், பதிவேட்டில் உடனடியாக உரிமை, மாற்றம் செய்யலாம். ஆனல், அந்த மாற்றம், பதிவான சொந்தக்காரரிடமிருந்து மற்றெருவருக்கு இருக்க வேண்டும். பதிவான சொந்தக்காரராக இல்லாத ஒருவரிடமிருந்து மற் ருெருவருக்கு உரிமை மாற்றம் செய்வதானுல், பதிவேட்டில் உரிமை மாற்றம் செய்வதற்கு முன், (1) துணை விதியில் ஏற்பாடு செய்துள்ளவாறு பதிவான சொந்தக்காரருக்கு அறிவிப்பு அனுப்ப வேண்டும். ஆல்ை, சுவாதீன ஒப்படைச் சான்றிதழ் கொண்டுவர முடியா விட்டால், உதாரணமாக, டிக்ரி பிறப்பிக்கப்பட்ட பிறகு நிறைவேற்று நடவடிக்கை எதுவுமின்றிச் சுவாதீனம் விடப்பட்டிருந்து டிக்ரி முடிவான். தாகத் தோன்றினுல், பதிவேட்டில் உரிமை மாற்ற வேண்டு. மென உரிமை மாற்றிக்கொள்ளும் கட்சிக்காரர்களில் ஒருவர் மட்டுமே செய்து கொள்ளும் விண்ணப்பம் விஷயமாய் (1) துணைவிதியில் ஏற்பாடு செய்துள்ளவாறே இந்த விஷயம் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்