104 திலும், ஒரு பகுதி அதற்கு வெளியிலும் செய்து வந்தால், பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் தொழில் வரி விதிக்கும் காரி யத்துக்காக, அந்தப் பஞ்சாயத்துப் பகுதியில் அந்தக் கம்பெனிக்கு அல்லது நபருக்கு மேற்படி தொழிலிலிருந்து கிடைக்கிற வருமானம் சந்தர்ப்பத்திற்கேற்ப, அந்த அரை ஆண்டில் அல்லது சென்ற ஆண்டின் நிகரான அரை ஆண்டில் அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தொழிலின் மொத்த வியாபாரத் தொகையில், 4-வது விதியை அனு சரித்துக் கணக்கிட்ட சத விகிதமாகும் எனக் கருதப்பட வேண்டும். - (3) துணை விதி (1)-ன்படி (b) பகுதியின் காரியத் துக்காகவும், துணை விதி (2)-ன் காரியத்துக்காகவும் ஏதாவது ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் தொழிலின் மொத்த வியாபாரத் தொகை என்பது அந்தக் கிராமத்தில் அல்லது நகரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட, தயாரிக்கப் பட்ட, வாங்கப்பட்ட அல்லது விற்பனே செய்யப்பட்ட சர்க்குகளின் மொத்த ரூபாய் மதிப்பு எனப் பொருள்படும்; அதில் கடன் கொடுப்பது அடங்காது. விளக்கம்.-இந்தத் துனே விதியின் மேற்படி தொழிலின் மொத்த வியாபாரத் தொகையை நிர்ணயிக்கையில் (a) ஏதாவது ஒரு கம்பெனி அல்லது நபர் விலக்கு வாங்கிய சரக்குகளே ஒப்புவிப்பதும், அதே சரக்குக.ஆர் மேற்படி கம்பெனி அல்லது நபர் விலக்கு விற்ருல், அவற்றை ஒப்படைப்பதும் தமிழ்நாட்டுக்குள்ளேயே நடைபெற்ருல், இரண்டாவதாகக் கூறிய விவகாரத்தைமட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். (b) ஏதாவது ஒரு கம்பெனி அல்லது நபர் விலக்கு வாங்கிய சரக்குதள் தமிழ் நாட்டிற்கு வெளியேயுள்ள ஓர் இடத்தில் ஒப்புவிக்கப்பட்டிருந்து, அதே சரக்குகளே அந்தக் கம்பெனி அல்லது நபர் விற்பனை செய்து, அந்தச் சரக்கு களேத் தமிழ் நாட்டிற்குள் ஒப்படைத்தால், இரண்டாவதாகச் சொன்ன விவகாரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். - (c) ஒரு கம்பெனி அல்லது நபர் விலக்கு வாங்கிய சரக்குகளே ஒப்புவிப்பது தமிழ்நாட்டிற்குள் எங்கேயர்வது ஒரு இடத்தில் நடைபெற்று, அதே சரக்குகளே கம்பெனி அல்லது நபர் விற்பனை செய்து ஒப்புவிப்பது தமிழ் நாட்டிற்கு
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/591
Appearance