உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#10 (b) அரை ஆண்டின்போது மொத்தத்தில் அறுபது தினங்களுக்குக் குறையாமல் கிராமம் அல்லது நகரத்திற்குள் வரி விதிக்கப்பட்டவர் வசித்திருந்தால் அந்த அரை ஆண்டின்போது ஓய்வு ஊதியம் (பென்ஷன்) மூலமாக அல்லது முதலீடுகள் மூலமாக அவருக்குக் கிடைத்த வருமானம், (7) ஏதேனும் ஒரு கம்பெனி அல்லது நபரின் மொத்த வருமானத்தின் அடிப்படையில் அந்தக் கம்பெனி அல்லது நபருக்கு வரி விதிக்கப்படும். 42. வாகன வரி (ப. ச. 122) விதிகள் 1. பஞ்சாயத்து சட்டத்தின் 119-வது பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்கீழ் விதிக்கப்படும் வாகன வரி அடியிற் கண்டவற்றிற்கு விதிக்கப்படக்கூடாது. (a) மத்திய அல்லது மாநில அரசாங்கத்துக்குச் சொந்தமானவையும், ராணுவ காரியங்களுக்காக உபயோ கிக்கப்படுபவையுமான வாகனங்கள் ; (b) வாகனத்தை உற்பத்தி செய்பவர்களும் வியாபாரி களும் விற்பனைக்காக வைத்துள்ள வாகனங்கள் ; (c) அரை ஆண்டு முழுவதும் வாகன உற்பத்தி செய்பவரிடம் இருந்து வரும் அல்லது இயங்காமல் இருக்கும் வாகனங்கள். - 2. கீழே கண்டுள்ள அட்டவணேயின் (2)வது பத்தி யில் குறிப்பிட்டுள்ள விகிதங்களுக்கு மேற்படாமலும் (3)வது பத்தியில் குறிப்பிட்டுள்ள விகிதங்களுக்குக் குறையாமலும், வாகன வரி விதிக்கப்படும் :