1#2 3. (1) வரி விதிக்கத்தக்க ஏதாவது ஒரு வாகனத்தை தம் அனுபோகத்தில் அல்லது தம்மிடம் ஆல்லது தமது மேல் விசாரணையின் கீழ் வைத்துள்ள ஒவ்வொரு நபரும், ஓர் அரை ஆண்டில் 60 தினங்களுக்குக் குறையாத கால் அளவுக்கு கிராமத்திற்குள் அல்லது நகரத்திற்குள் அந்த வாகனம் வைத்திருக்கப்பட்டிருந்தால் அல்லது உபயோ கிக்கப்பட்டிருந்தால் முழு அரை ஆண்டு வரியை அவர் செலுத்த வேண்டும். (2) மொத்தமான கால அளவு 1 தினங்களுக்கு மேற்பட்டு 60 தினங்களுக்கு மேற்படாவிட்டால், அர்ை ஆண்டு வரையில் பாதி வரிமட்டுமே விதிக்கப்படும். - (3) அந்த மொத்தமான கால அளவு தி இனங் களுக்கு மேற்புடாவிட்டால், அந்த அரை ஆண்டுக்காக எந்த வரியும் விதிக்கப்படமாட்டாது. ... --- (4) ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் வரி விதிக்கத் தக்க வாகன்ம் ஒன்றை தம் அனுபோகத்தில் அல்லது தம் இடம் அல்லது தம்முடைய மேல்விசாரணையின்கீழ் வைத் துள்ள ஒவ்வொரு நபரும் அதற்கு முரணுது ஏதேனும் காட்டப் ப்டும் வ்ரையில், அரை ஆண்டில் 60 தினங்களுக்கு அந்த வர்கனத்தை மேற்படி கிராமத்திற்குள் அல்லது நகரத்திற்குள் வைத்திருந்ததாக அல்லது உபயோகித்ததாகக் கருதப்படும். (5) துணை விதிகள், (1) (2)-ல் என்ன சொல்லி யிருப்பினும் எந்த நபரும் (a) எந்த ஒரு வாகனம் விஷயமாக அதே அரை ஆண்டுக்கான முழு வரியும் வேறு யாராவது ஒரு நபரால் பஞ்சாயத்துக்கு ஏற்கெனவே செலுத்தப்புட்டுள்ளதோ, அந்த வர்கனம் விஷயமாக அந்த அரை ஆண்டின்போது பஞ்சா யத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. 妙 (b) எந்த ஒரு வாகனம் விஷயமாகவேனும் தமிழ் நாட்டிலுள்ள ஏதாவது ஒரு பஞ்சாயத்துக்கு டவுன்ஷிப் கமிட் டிக்கு, நகராட்சி கமிட்டிக்கு, அல்லது கண்டோன்மெண்ட் அதிகாரிக்கு ஏற்கெனவே வரி செலுத்தப்பட்டிருந்தால், அவர் வாகன வரி செலுத்த வேண்டியதில்லை. அதாவது, இதர பஞ்சாயத்து, டவுன்ஷிப் கமிட்டி நகராட்சி மன்றம் அல்லது தண்டோன்மெண்டு அதிகாரிக்கு ஏற்கெனவே, அந்த வண்டி விஷயமாக செலுத்திய வரியைவிட மேற்படி
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/599
Appearance