பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 பிரிவை 1.24 (2) (a) பிரிவுடன் சேர்த்து வாசிக்கையில் அறியப்படுகிற விதமாக அவ்வாறு தனித்தனியாகக் குறிப் பிடப்பட்டுள்ளனவா என பார்க்க வேண்டும். மேலும், அவர், சம்பந்தப்பட்ட சொத்து எந்தப் பஞ்சாயத்தின் அதிகார வரம்பில் உள்ளதோ அது பத்திரத்தில் தெளிவாகக் குறிப் பிடப்பட்டுள்ளதா என்று நிச்சயித்து அறிய வேண்டும். (2) மேற்படி விவரங்கள் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிராவிட்டால், பதிவு அலுவலர் அதைக் கைப் பற்றி, அசல் பிரதியைக் கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். பஞ்சாயத்துச் சட்டத்தின் 64-வது பிரிவை 124 (2) (b) பிரிவுடன் சேர்த்து வாசிக்கையில் அறியப்படுகிற விஷயத் தைக் கவனிக்கும்படியும் அவர் கலெக்டரைக் கேட்டுக் கொள்ள வேண்டும். (3) பரிவர்த்தனைப் பத்திரம் ஒன்றின் மீது விதிக்கப்படத் தக்க தீர்வை அடியிற்கண்டவாறு முறைப்படுத்தப்படும்: (a) பரிவர்த்தனே செய்யப்படும் சொத்துக்களின் மதிப்புகள் சமமாக இல்லாவிட்டால், அதிக மதிப்புள்ள சொத்தின் மதிப்பின்மீது தீர்வை விதிக்கப்படத்தக்கதாகும். (b) பரிவர்த்தனே செய்யப்படும் சொத்துக்களின் மதிப்பு சமமாக இருந்தால், அதிகமான தொகை தீர்வை விதிக்கப்படத் தக்கதாகும். 5. (சொத்து) மாற்றத் தீர்வை சம்பந்தமாகக் கணக்குகளே வைத்திருப்பதும் ஒருங்கு சேர்ப்பதும் (1) (a) ஒவ்வொரு பதிவு அலுவலரும் தாம் பதிவு செய்யும் ஒவ்வொரு பத்திரம் விஷயமாகவும் செலுத்திய தீர்வையின் கணக்கை வைத்து வர வேண்டும். முத்திரைத் தாள் சட்டத்தின்கீழ் வி தி க் க ப் ப ட் ட தீர்வையையும் (சொத்து) மாற்றத் தீர்வையையும் அதில் தனித்தனியே அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து எந்தப் பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்குள் இருக்கிறதோ அதற்காகத் தனித்தனிக் கணக்கை அவர் வைத்து வர வேண்டும். அவ்வாறு செய்கையில் அவசியமான போதெல் லாம் அவர் எந்தத் தொகையின் மீது (சொத்து) மாற்றத் தீர்வை விதிக்கப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அவர் நிச்சயித்து அறிய வேண்டும்.