பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 (b) இது விஷயமாக, பதிவு அதிகாரி கணக்குகள் வைத்து வருவது விஷயமாக தலைமைப் பதிவாளர் நிர்வாக உத்தரவுகளே வெளியிடலாம். சம்பந்தப்பட்ட மாவட்டங் களின் கஜான அலுவலகங்களுக்கு ஒவ்வொரு கால் ஆண் டுக்காக ஒருங்கு சேர்க்கப்பட்ட கணக்கு எந்த நமூனப்படி அனுப்பப்பட வேண்டும் என்பது பற்றியும் அவர் நிர்வாக உத்தரவுகள் வெளியிட வேண்டும். (2) எவையேனும் பத்திரங்கள் (1) 1908-ம் ஆண்டு இந்தியப் பத்திரப் பதிவுச் சட்டத்தின் 17-வது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்ய தேவையற்றதாக இருப்பதானுல் அவை பதிவு அலுவலர்களிடம் வராமலிருந்தால், மேற்படி பத்திரங்கள் விஷயமாக, எந்தக் கலெக்டர் முன்பு முத்திரைத் தாள் சட்டத்தின் 31 அல்லது 41-வது பிரிவின்கீழ் அது கொடுக்கப்படுகிறதோ அல்லது எந்தக் கலெக்டர் மேற்படி சட்டத்தின் 33-வது பிரிவின் கீழ் அதைக் கைப்பற்றுகிருரோ அல்லது எந்தக் கலெக்டர் மேற்படி சட்டத்தின் 33-வது பிரிவின்கீழ் அந்தப் பத்திரம் ஏதாவது ஒன்றின் அல்லது அதன் அசல் பிரதியின் சம்பந்தமாகச் செலுத்திய தீர்வை அல்லது அபராதம் பற்றிய சான்றிதழைப் பெறுகிருரோ அத்தகைய கலெக்டர், அந்தப் பத்திரம் ஒவ்வொன்றின் விஷயமாகச் செலுத்தப்பட்ட தீர்வைக்கான கணக்கு ஒன்றை வைத்து வர வேண்டும். மேலும் அவர், முத்திரைத் தாள் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட வரி, (சொத்து) மாற்று வரி, இவற்றை அதில் தனித்தனியே குறிப்பிட வேண்டும்: அன்றியும் அவர், சம்பந்தப்பட்ட உறுதிகூறும் பதிவாளரிடம் (Registrar of ASSurances) 525i, 36. To fistóð so,6%riq-63r முடிவிற்குப் பின், ஒரு மாதத்திற்குள், கால் ஆண்டுக்கான ஒருங்கு சேர்ந்த கணக்கு ஒன்றை அனுப்ப வேண்டும். பத்திரம் எழுதிக் கொடுப்பவர், உரிமை கொண்டாடுபவர் இவர்களது பெயர்கள், பத்திரம் எழுதிய தேதி,விவகாரத்தின் தன்மை, எந்தத் தொகைமீது (சொத்து) மாற்றுத் தீர்வை விதிக்கப்படுகிறது என்பது, பஞ்சாயத்திற்குள் அல்லது அதற்கு வெளியில் உள்ள சொத்தின் விவரம் ஆகிய விவரங் கள் ஒவ்வொரு பத்திரத்தின் விஷயமாக மேற்படி கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். (3) ஏதாவது ஒரு புத்திரத்தின்மீது செலுத்தப்படத்தக்க முழுத் தீர்வையை வசூலிப்பது எந்த ஒரு விஷயத்தில் இயலா மலிருந்தால், முத்திரைத்தாள் சட்டத்தில்ை விதிக்கப்பட்ட தீர்வைக்கு அதிகமாக அத்தகைய பத்திரங்கள்மீது வசூலிக்