பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#19 ளுடன் பஞ்சாயத்தின் அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப் பட வேண்டும். பஞ்சாயத்து மேற்படி தொகைகள் தள்ளுபடி செய்வதை அனுமதிக்க வேண்டும். ஒரு தீர்வை அல்லது கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய சிபாரிசு செய்யும் முன்பு, அதைச் செலுத்தத் தவறியவருக்கு கிராமம் அல்லது நகரில் ஜப்தி செய்யத்தக்க சொத்து எதுவும் இல்லே என்றும், அதை வசூலிக்கச் செய்த எல்லா முயற்சிகளும் பயனளிக்கவில்லே என்றும் நிர்வாக அதிகாரி அறிந்துகொள்ள வேண்டும். 3. தள்ளுபடி செய்யப்பட்ட தீர்வைத் தொகைகள், கட்டணங்கள் குறித்து அரசாங்கம் குறிப்பிடக்கூடிய நமூன வின்படி ஒரு பதிவேட்டில் குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டும். - - 4. ஒரு பஞ்சாயத்து, தீர்வைத் தொகைகள் அல்லது கட்டணங்களேத் தள்ளுபடி செய்ய அனுமதிக்கும்போது, அது மேற்படி பதிவேட்டில் எழுதப்பட வேண்டும். வரி, கட்டணம் அல்லது இதர தொகையின் தன்மை (வரி சம்பந் தப்பட்ட இனங்கள் விஷயமாக வரி விதிப்பு இலக்கமும் குறிப் பிடப்பட வேண்டும்). தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, அது சம்பந்தப்படும் கால அளவு இவற்றை விவரமாக் நடவடிக்கைக் குறிப்புப் புத்தகத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். அல்லது பஞ்சாயத்து விரும்பினால், தள்ளுபடி செய்த தொகை பற்றிய பதிவேட்டில் உள்ள தொடர் இலக் கத்தைப்பற்றிக் குறிப்பிடலாம். ஒவ்வொரு சமயத்திலும் தள்ளுபடி செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட மொத்தத் தொகை ஒவ்வொரு விஷயத்திலும் சொற்களில் எழுதப்பட வேண்டும். - 5. தள்ளுபடி செய்யப்பட்ட வரித் தொகைகள், கட்ட னங்கள் அல்லது இதர தொகைகளுக்கான பில்கள் அல்லது வாரண்டுகள் (இரண்டு பிரதிகளும்), அவ்வாறு தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில், 'தள்ளுபடி செய்யப்பட்டவை” என்று முத்திரையிடப்பட் வேண்டும். அதே சமயத்தில் பதிவேடுகளில் அவசியமான பதிவுகள் செய்யப்பட வேண்டும். 6. வசூலிக்க முடியாதென தள்ளுபடி செய்யப்பட்ட வரி, கட்டணம் அல்லது இதர தொகை 50 ரூபாய்க்கு மேற் பட்டால், அதற்காக ரெவினியு டிவிஷனல் அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும்.