பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சாயத்தை நடத்துவது எப்படி 1. பஞ்சாயத்து ஏற்படுத்துவது எப்படி? 500 அல்லது அதற்கு மேற்பட்ட ஜனத் தொகையுள்ள கிராமம் ஒவ்வொன்றுக்கும் ஒரு பஞ்சாயத்து கட்டாயமாக இருக்க வேண்டும். ஐநூறுக்குக் குறைந்த ஜனத் தொகையுள்ள கிராமமா யிருந்தால் அதை அதற்குப் பக்கத்திலுள்ள இன்னுெரு கிராமத்துடன் இணைத்து ஒரு பஞ்சாயத்தாக ஏற்படுத்த வேண்டும். இவற்றை யெல்லாம் செய்ய வேண்டியவர் ஸ்தல ஸ்தாபன இன்ஸ்பெக்டர். 2. பஞ்சாயத்தை எப்படி தரம் பிரிப்பது ? பஞ்சாயத்துகளை அரசாங்கம் இரண்டு ரகமாகப் பிரித் திரு க்கிரு.ர்கள். பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத வருட வருமானமும். ஐயாயிரத்துக்குக் குறையாத ஜனத் தொகையும் கொண்ட பஞ்சாயத்துகள் பட்டணப் பஞ்சாயத்துகள் என்று பிரிக்கப் பட்டுள்ளன. - - மற்றவை கிராமப் பஞ்சாயத்துகள். 3. பஞ்சாயத்துகளின் முக்கிய கடமைகள் எவை? கிராமங்களில் சாலைகளை ஏற்படுத்தி அவற்றை பரா மரிப்பது. . பொதுச் சாலைகளிலும்-இடங்களிலும் விளக்குப் போடுவது. ஜலதாரை, சாக்கடை அமைத்தல் : கழிவுநீர் வெளியேற வழி செய்தல். தெருக்களை சுத்தம் செய்தல், குப்பை மேடு, புதர்கள் முதலியவற்றை அப்புறப் படுத்துதல்.