உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. சாலைகளில் வளர்ந்துள்ள மரங்கள் [ш. ғ. 178. (2)(xxxy)] விதிகள் 1. பஞ்சாயத்துச் சட்டத்தின் 73-வது பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள ஏதேனும் ஒரு பொதுச் சாலேயில் வளர்ந்துள்ள (மரவரி ஏற்பாட்டில் அனுமதித்திராத இதர) மரங்கள் பஞ்சாயத்தில் நிலைபெறும். ஆல்ை, அத்தகைய மரங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமாகும்: அல்லாமலும், அரசாங்கத்தினர், சம்பந்தப்பட்ட பஞ்சா யத்து, இந்த விதியின்கீழ் அதற்குள்ள உரிமைகளேத் தவருகப் பயன்படுத்திவிட்டதெனக் கருதினால், அத்தகைய மரங்களே பஞ்சாயத்தின் மேற்பார்வையிலிருந்து எடுத்து விடலாம். 2. 86 (2) பிரிவின்கீழ் பஞ்சாயத்திடம் நிலைபெற்றுள்ள ஏதாவது ஒரு புறம்போக்கு நிலத்தில் பஞ்சாயத்தில்ை நடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மரத்தை பஞ்சாயத்து உபயோ கப்படுத்துவது மேற்படி சட்டத்தின் 86 (4) பிரிவினுல் முறைப்படுத்தப்படுகிறதோ, அந்த மரத்தை அரசாங்கத்தார் வெட்டி அகற்றலாம். அவ்வாறு வெட்டி அகற்றிய மரங் களுக்காக அரசாங்கத்தார் நஷ்டஈடு கொடுக்க வேண்டிய தில்லை. மேற்சொன்னவாறு வெட்டி அகற்றப்பட்ட மரங்கள் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்படலாம், அல்லது பொது ஏல்த்தின் மூலம் விற்பனே செய்யப்படலாம். ஏலத்தில் விற்கும் விஷயத்தில், விற்பனே மூலம் கிடைக்கும் தொகை, பஞ்சாயத்து நிதியில் வரவு வைக்கப்பட வேண்டும். 3. பஞ்சாயத்து சட்டத்தின் 76 (1) பிரிவின்கீழ் நிலேபெற்றுள்ள ஏதாவது ஒரு பொதுச் சாலேயை, அல்லது, மேற்படி சட்டத்தின் 86 (2) பிரிவின்கீழ் நிலைபெற்றுள்ள் ஏதேனும் ஒரு புறம்போக்கு நிலத்தை, அல்லது மேற்படி சட்டத்தின் 86 (4) பிரிவின்கீழ் அல்லது 87-வது பிரிவின்கீழ் பஞ்சாயத்தினுல் முறைப்படுத்தப்படுகிற நிலத்தை அடுத் துள்ள நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு, பழ மரங்களே நடுவதற்கு லேசென்ஸ் வழங்கலாம்.