26 கிராமத்தின் சுகாதாரத்தைப் பாதுகாத்தல், பொதுக் கக்கூசுகள் ஏற்படுத்துதல். வீடுகளிலும், பொது இடங்களிலுமுள்ள கக்கூசுகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தல். கிராம மக்களின் குடி தண்ணிர் வசதிக்காக கிணறு, குளம் வெட்டுதல், பராமரித்தல். நோய்கள் வராமல் தடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடு செய்தல். இவை யெல்லாம் பஞ்சாயத்துகள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள். 4. தேவையாளுல் செய்யவேண்டிய அலுவல்கள் எவை ? கிராமங்களிலுள்ள சாலை ஒரமாக நிழல்தரும் மரங்களே நடுதல், அவற்றை பாதுகாத்தல். மார்க்கெட்டுகள் ஏற்படுத்திப் பராமரித்தல் சந்தைகள், திருவிழாக்கள் முதலியவற்றைக் கவனித்து; சுகாதார வசதிக்கு ஏற்பாடு செய்தல். வண்டிப் பேட்டைகள், வண்டி திற்கும் ஸ்டாண்டுகளே ஏற்படுத்துதல், ஆடு, மாடுகளை அடிக்கும் தொட்டிகளை ஏற்படுத்திப் பராமரித்தல். ஆரம்பப் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி நடத்துதல் : வாசக சாலைகளும், நூல் நிலையங்களும் ஏற்படுத்தி நடத்துதல், பொது மக்கள் ரேடியோ கேட்கவும், விளையாடவும். மைதானம் அமைத்தல். 5. பஞ்சாயத்து அங்கத்தினராவது எப்படி? ஒவ்வொரு பஞ்சாயத்தும் பல வார்டுகளாகப் பிரிக்கப் புட்டிருக்கும். ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க குறிப்பிட்ட தேர்தல் நடைபெறும். -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/62
Appearance