14f 3. 2-வது விதியின்கீழ் விதிக்கப்படும் கட்டணங்களின் வி கி த த் ைத கணக்கெடுக்கையில், பஞ்சாயத்தானது, கக்கூஸ்-கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கையையும் சாக்கடைகளின் விஷயத்தில் அதன் பரப்பு, ஆழம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். 56. தணிக்கையாளர், மேற்பார்வையிடும் அதிகாரிகளின் அதிகாரங்கள் [L. f. 178, (2). xvii) விதிகள் 1. விசாரணைகள் நடத்த பஞ்சாயத்து சட்டத்தினுல், அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளில்ை அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள எல்லா நபர்களும், மேற்படி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்களும் தங்கள் கடமை வரம்பிற்குள் அடங்குகிற விஷயங்களே விசாரனே செய்பவருமான தணிக் கையாளர்கள், பார்வையிடும் அலுவலர்கள், மேற்பார்வை யிடும் அதிகாரிகள், அனே வரும் மேற்படி விசாரணை நடத்தும் காரியத்திற்காக அடியிற் கண்ட அதிகாரங்களே உடைய வராவர்: (i) விசாரணையில் இருக்கிற ஒரு விஷயத்தை விசாரிப் பதற்கு அந்த மாவட்டத்தில் வசிப்பவர் எவருடைய சாட்சியம் அவசியமென தங்களுக்குத் தோன்றுகிறதோ சம்மன் அனுப்பி அவரை வரும்படிசெய்தல்; விசாரனேயில் உள்ள விஷயத்திற்குச் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜூ எதுவும் அந்த நபரின் சுவாதீனத்தில் அல்லது கட்டுப்பாட்டில் இருந்தால், அதைக் கொண்டு வரும்படி உத்தரவிடுதல். (ii) சிவில் நீதி மன்றம், சம்மன் அனுப்பி வரவழைத்த சாட்சிக்குக் கொடுக்கத்தக்க படியை அந்த நபருக்குக் கொடுத்தலும், அந்தப் படியை எந்த நபர் கொடுக்க வேண்டும்,அல்லது எந்த நிதியிலிருந்து கொடுக்க வேண்டும் என்பது குறித்து உத்தரவு பிறப்பித்தலும், 2. அந்த சம்மனே பிறப்பிக்கிற அதிகாரி, அதில் கையொப்பமிட வேண்டும்; அவருக்கு முத்திரை ஏதேனும் இருந்தால் அதைப் பதிய வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/628
Appearance