உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#49 4. துணை விதி, அல்லது துணை விதியின் ரத்து அல்லது மாற்றம், பஞ்சாயத்து அலுவலகத்தில் கொடுக்கப் பட்டதிலிருந்து மூன்று மாதங்கள் முடிவடைவதன்மீது அமுலுக்கு வரும். 64. ஒதுக்கப்படாத காடுகள் (ப. ச. 72.) விதி ஏதாவது ஒரு ஒதுக்கப்படாத காடு, பஞ்சாயத்தின் மேல் விசாரணையிலிருந்து 72-வது பிரிவின் (2) உட்பிரிவில் கண்ட (a) பகுதியின்கீழ் ரெவின்யு டிவிஷனல் அதிகாரி யால் நீக்கி வைக்கப்படும் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படலாகாது. அதில் மேற்படி பிரிவைச் சேர்ந்த (b) பகுதியின்படி அளிக்கப்பட்ட ஏதேனும் நீடிப்புக் கால அளவுகளும் அடங்கும். 65. அறிவிப்புகள் அல்லாத மற்ற தஸ்தாவேஜூ களைச் சேர்ப்பிக்கும் முறை (ப. ச. 178. (1)) விதி பஞ்சாயத்துச் சட்டத்தின்படி, அறிவிப்பு அல்லாத ஏதாவது ஒரு தஸ்தாவேஜூ அல்லது விதி, துணே விதி, நடைமுறை அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட ஏதாவது ஒரு கட்டளே யாரேனும் ஒரு நபருக்குச் சார்வு செய்யப்பட வேண்டியிருந்தால் அல்லது அனுப்பப்பட வேண்டியிருந் தால் அதை கீழ்க்கண்டவாறு சார்வு செய்ய வேண்டும் அல்லது அனுப்ப வேண்டும் : (i) மேற்படி தஸ்தாவேஜை அத்தகைய நபருக்குக் கொடுப்பதன்மூலம் அல்லது கொடுக்கச் செய்வதன் மூலம்; (ii) அந்த நபர் வீட்டில் இல்லேயென்ருல், முடிவாக அவர் வீடு என்று தெரிந்த வீட்டிலாவது, தொழில் இடத்தி லாவது, பத்திரத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வதன்மூல. மாகவோ, அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களிடத்திலாவது அ ல்லது ஊழியர்களிடமாவது கொடுத்து அல்லது ஒப்புவிப்பதன் மூலமாக அல்லது