பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 (iii) அந்த நபர் சந்தர்ப்பத்துக்கேற்ப கிராமத்திலா வது, நகரத்திலாவது வசிப்பவராக இல்லாமலிருந்து, வேறு ஒரு இடத்தில் உள்ள அவரது முகவரி நிர்வாக அதிகாரிக்கு, தெரிந்திருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைப்பதன் மூலமாக; (iv) மேற்படி வழிகளில் சேர்ப்பிப்பதில் எதுவும் சாத் தியமில்லே என்ருல், இருப்பிடத்தில் அல்லது தொழில் இடத் தில் பிரதானமான இடத்தில் அதை ஒட்டி வைப்பதன் மூல மாக சார்வு செய்யலாம் அல்லது அனுப்பி வைக்கலாம். 66. ஊற்றுகள், குளங்கள், கிணறுகளின் உபயோகம்-தடை-ஒழுங்கு படுத்துதல் [L. F. 178. (2) xxix] விதிகள் 1. ஏதாவது ஒரு பொது ஊற்று, குளம் அல்லது கிணறு, பொது நீர்நிலை அல்லது அதன் பகுதி இவற்றில் ஆடு, மாடுபோன்ற பிராணிகளேக் குளிப்பாட்டுவது, துணிகள் துவைப்பது, மீன் பிடிப்பது ஆகியவற்றை பொதுச் சுகாதார நலனே முன்னிட்டு பஞ்சாயத்து முறைப்படுத்தலாம் அல்லது தடைப்படுத்தலாம். பஞ்சாயத்து அத்தகைய இடத்தை குடிதண்ணிருக்காக அல்லது குளிப்பதற்காக அல்லது ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டுவதற்காக அல்லது துணிகள் துவைப்பதற்காக அல்லது குறிப்பிட்ட இத்ர காரியத்துக்காகவே ஒதுக்கியும் வைக்கலாம். - 2. யாரேனும் ஒரு தனியார் ஊற்று, குளம், கிணறு அல்லது நீர்நிலை விஷயத்தில், அந்த இடத்தின் சொந்தக் காரருடைய உடன்பாட்டுடன் 1-வது விதியில் கொடுத்துள்ள அதிகாரங்களைப் பஞ்சாயத்து செலுத்த வேண்டும். 3. யாரேனும் ஒரு தனியார் ஊற்று, குளம், கிணறு அல்லது நீர்நில இவற்றை குடிதண்ணிருக்கு மக்கள் பயன் படுத்துவதாயிருந்தால், பொதுச் சுகாதார் நலனே முன்னிட்டு பஞ்சாயத்து, ஆடு, மாடுகள் குளிப்பாட்டுவதை, துணி துவைப்பதை, சாமானகள் கழுவுவதை முறைப்படுத்தலாம் அல்லது தடை செய்யலாம். . 4. மேற்படி கிராமத்தில் அல்லது நகரத்தில் பொது மக்கள் பயன்படுத்துகிற கிணறு, குளம், ஊற்று அல்லது