பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 நீர்நிலையில் உள்ள தண்ணிர் உயிருக்கு ஆபத்து உண்டாக் குவதாய் அல்லது கொடிய நோய் பரவச் செய்வதாகத் தெரிந்து அரசாங்கத்தினர், பஞ்சாயத்து அல்லது பஞ்சா யத்து யூனியன் வேலேக்கு அமர்த்தியுள்ள மருத்துவ அதிகாரி எழுதிய சான்றுக் கடிதம் ஒன்றைப் பஞ்சாயத்து வரப்பெற்றவுடன் பொது அறிவிப்பு கொடுத்து தண்ணிரைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேற்படி தடை எந்த நாள் வரை நீடிக்கும் என்பதைக் குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை நீர்நிலேக்கு அருகில் ஒட்டி வைப்பதன் பேரில் அல்லது தண்டோரா போட்டு விளம்பரப் படுத்து வதன் மூலமும் தெரிவிக்கலாம். மேலும் சான்றுக் கடிதம் கொடுக்கப்படாமலேயே நிர்வாக அதிகாரி, அறிவிப்பில் கண்ட கால அளவை நீடிக்கலாம் அல்லது அறிவிப்பை மாற்றி அமைக்கலாம். w 5. எந்த நபரும் (a) பஞ்சாயத்தின் சொத்தோ தனியார் சொத்தோ எதுவானுலும் அதன் சொந்தக்காரர், குடிதண்ணிருக்காக அல்லது சமையல் காரியமாக ஒதுக்கியுள்ள நீர்நிலையில் குளிக்கக்கூடாது அல்லது நீரை அசுத்தப்படுத்தக்கூடாது; அல்லது (b) மேற்சொல்லிய குடிதண்ணிருக்கென ஒதுக்கிய இடத்தில் அதன் வறண்ட நீர்ப் படுகையில் குற்றம் சாட்டப் படும் அல்லது தீங்கு விளேவிக்கப்படும் பொருள்களைச் சேர்த்து வைக்கக்கூடாது; (c) குடிதண்ணிருக்காக அல்லது குளிப்பதற்காக என ஒதுக்கியுள்ள இடத்தில் துணிகளேத் துவைக்கக்கூடாது; (d) குடிதண்ணிருக்காக, குளிப்பதற்காக அல்லது துணிகளேத் துவைப்பதற்காக ஒதுக்கியுள்ள இடத்தில் ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டுவதோ அல்லது பற்றுப் பாத்திரம், தோல், கம்பளம் அல்லது நாற்றம் விளேவிக்கக்கூடிய் அல்லது குற்றம் சாட்டத்தக்க பொருள்களே கழுவுவதோ அல்லது குற்றம் சாட்டப்படுகிற அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்களேச் சேர்த்து வைப்பதோ கூடாது; (e) குடிதண்ணிருக்காக அல்லது குளிப்பதற்காக அல்லது துணிகள் துவைப்பதற்காக ஒதுக்கிய இடத்தில் புதை குழி, புதை சாக்கடை, சாக்கடைக்கால், மேற்படி நபருக்குச் சொந்தமான இயந்திரம் அல்லது கொப்பறை