பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நாடு கவர்னர் அவர்கள், அரசாங்கத்திடம் நிலேத்துள்ளவை யும், அடியிற்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வையுமான அதிகாரங்களேக் கலெக்டர்களுக்குப் பிரித்துக் கொடுக்கிருர்கள். சட்டத்தின் பிரிவுகளும் அதிகாரங்களும் 5. (1) (a) பஞ்சாயத்துகளே 1-ஆம் வகுப்பு பஞ்சாயத் துக்களாகத் தரம் பிரித்தல். 5. (2) (5 (1) (a)) பிரிவின்கீழ் செய்யப்பட்ட பஞ்சா யத்தின் தரத்தை மாற்றுதல். 80. (a) (விலக்கு நிபந்தனை) நிர்வாக அதிகாரியால் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்தின் தீர்மானம் சட்டப்படி அல்லாத முறையில் நிறைவேற்றப்பட்டதா அல் லது கொடுத்துள்ள அதிகாரங்களே மீறிச்செய்யப்பட்டுள்ளதா அல்லது மனித உயிருக்கு அல்லது நலத்திற்கு அல்லது பொது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளேவிக்கக்கூடியதா என்பதை தீர்மானித்தல். 48. (1) (3) பஞ்சாயத்துகளைக் கலைக்க அல்லது ரத்து செய்ய அதிகாரம். 48. (5) பஞ்சாயத்துகள் கலேக்கப்பட்ட காலத்தில், அல்லது ரத்து செய்யப்பட்ட காலத்தில், பஞ்சாயத்தின் அதிகாரங்களேச் செலுத்த, அலுவல்களே நிறைவேற்ற எந்த அளவு அதிகாரம் தலைவருக்கு உள்ளது என்பதைக் தீர்மா னித்தல். 48. (6) ஒரு பஞ்சாயத்து கலேக்கப்பட்டு அல்லது ரத்து செய்யப்பட்டு மீண்டும் கூட்டப்படும்போது பஞ்சாயத்துக் குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களின் பதவிக் காலத்தின் முடிவு தேதியை நிர்ணயித்தல். 65. (5) தொழில் வரியை அடியிற் கண்டவைகளுக்குப் பகிர்ந்து அளித்தல் (i) ஒரு பஞ்சாயத்துக்கும், பஞ்சாயத்தாக இல்லாத மற்ற ஸ்தல ஸ்தாபன சபைக்கும் இடையே; -

  • (ii) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரீஜனல் இன்ஸ்பெக்டர்களின் அதிகார வரம்பிற்குள் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்குள்ளாக.