உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ஒரு அங்கத்தினர் தமது பதவிக் காலத்தில் இம்மாதிரி இரண்டு தடவைதான் செய்யலாம். அதற்குமேல் அவரைத் திரும்பவும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 11. தலைவராக ஆவது எப்படி ? ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு தலைவரும், ஒரு துணைத் தலைவரும் உண்டு. முதலில், பஞ்சாயத்து அங்கத்தினர்கள் எல்லோரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களுடைய கூட்டம், குறிப்பட்ட ஒரு தேதியில் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும். அப்பொழுது, அங்கத்தினர்கள் தங்கள் தலைவரையும், துணைத்தலைவரையும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

  • ★ 女 ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் ஒரு தலைவரும், துணைத்தலைவரும் உண்டு.

பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டபின், எல்லோரும் கூடி தங்கள் தலைவரையும், துணைத்தலைவரையும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். 12. தலைவருடைய முக்கிய அலுவல்கள் எவை? பஞ்சாயத்து சபையைக் கூட்டி, அவற்றிற்குத் தலைமை வகித்து முறையாக நடத்துதல். - பஞ்சாயத்துக்கென் தனியே நிர்வாக அதிகாரி நியமிக்கப் படாத இடங்களிலே, பஞ்சாயத்து நிர்வாகத்தை தாமே நடத்துவது. - அவர் பஞ்சாயத்து தஸ்தாவேஜுகளைத் தாராளமாகப் பார்வையிடக் கூடியவராக இருக்கவேண்டும், கூட்டத்தில் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டால் அது குறித்து தீர்ப்பளிக்க வேண்டும். பஞ்சாயத்துச் சட்டத்தின் மூலம் தலைவருக்கு உள்ள சகல கடமைகளையும், அதிகாரங்கள்ையும் செலுத்த வேண்டும்.