உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஒவ்வொரு பஞ்சாயத்துக் கூட்டம் நடந்த பிறகும் மூன்று நாட்களுக்குள் ம்ேற்படி கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பு நகல் ஒன்றை இன்ஸ்பெக்டருக்கு அனுப்ப வேண்டும். 13. தலைவர் தமது அதிகாரங்களை யாருக்கு வழங்கலாம் ? தலைவர் எழுத்து மூலமான உத்தரவிட்டு, தமது அலுவல் களில் எதையேனும் துணை த் தலை வருக்கு ப் பிரித்துக் கொடுக்கலாம். துணைத்தலைவர் இல்லாத சமயங்களில், அங்கத்தினர் ஒருவரிடம் அலுவல்களைப் பிரித்துக் கொடுக்கலாம். இது எழுத்து மூலமாக இருக்க வேண்டும். இது, பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும். இப்படி அதிகாரத்தைப் பிரித்துக் கொடுப்பது, வருடத் தில் 90 நாட்களுக்கு மேல் கூடாது. அதற்கு மேலும் கொடுக்க வேண்டுமானல் பஞ்சாயத்து சபையின் அனுமதி வேண்டும். இவ்வாறு, தமது அதிகாரத்தைப் பிரித்துக் கொடுப்பதை, தலைவர் அடுத்த கூட்டத்திலேயே தெரிவித்துவிட வேண்டும். 14. தலைவர் செய்யத் தகாத காரியங்கள் எவை ? பஞ்சாயத்துக் கூட்டம் பற்றி தேதி குறிப்பிட்டு, நோட்டீஸ் அனுப்பிய பிறகு, கூட்டத்தை ரத்து செய்யக் கூடாது. கூட்டத் தேதியை மாற்றக்கூடாது. அஜண்டாவில் நிகழ்ச்சி நிரல் காணப்படாத விஷயம். ஒன்றைத் திடீரென்று கூட்டத்தில் புகுத்தக்கூடாது. அங்கத்தினர்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது. ★ ★ 女 பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவருக்கும் மேற் கண்டவை பொருந்தும். 15. தலைவர் பதவி காலியாவது எப்படி?