பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அரசாங்கத்தின் நேரடிப் பராமரிப்பில் உள்ள சலே வகைகள்; . (d) பொது மராமத்துத் துறையின் புறம்போக்குகள்; (e) பஞ்சாயத்துச் சட்டத்தில் கண்டுள்ளபடி, புஞ்சா யத்துகள் வசம் ஒப்படைக்கப்பட்ட புறம்போக்கு நிலங்கள்; - (f) பஞ்சாயத்துச் சட்டத்தின் 86 (iv) பிரிவின் கீழும், 1960-ம் ஆண்டு ஏப்ரல் மர்த்ம் :-ந் தேதியுள்ள அர சாங்க உத்தரவு எண் 608-ன் படியும் பராமரிப்புக்காக பஞ் சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்கள்; (g) மேற்குறிப்பிடப்பட்டவை அல்லாமல், ஒப்படைக் கப்படாத பொது நிலங்கள். 4. பட்டா நிலம் பட்டா நிலங்களில் உள்ள மரங்களின்மீது பஞ்சாயத்து களுக்கு ஒரு உரிமையும் கிடையாது. அப்படிப்பட்ட மரங் த8ளப் பொறுத்த வரையில், அவைகளின் பேரில் அரசாங் கத்திற்கோ, பட்டாதாரர்களுக்கோ உள்ள உரிமைகளில், இந்த உத்தரவு ஒன்றும் மாற்றம் செய்யாது. 5. தனியார் ஆதிக்கத்தில் உள்ள மற்ற நிலங்கள் 1961-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதிக்கு முன்பு, அரசாங்க நிலங்களில் தனிப்பட்ட நபர்களால் மரங்கள் நடப்பட்டிருந்தால்: அவையும், அல்லது 1961-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதிக்கு முன்பே தனிப்பட்டவர்களால் கொள்ளப்பட்ட அரசாங்க நிலங்களில் மரங்கள் இருந்தால் அவை மீதும், தனிப்பட்டவர்களின் ஆதிக்கம் ஒழுங்கு படுத்தப்பட்டோ அல்லது காலிசெய்யப்பட்டோ இல்லே ய்ென்ருல், அப்படிப்பட்ட நிலங்களின்மீது பஞ்சாயத்து களுக்கு உரிமை கிடையாது. தனிப்பட்டோர் உரிமை, ஆக்கிரமிப்புச் செய்து கொண்டவர் வசமோ அல்லது மற்றவர் கிளிடமோ நிலத்தை ஒப்படைத்து, சட்டப்படி சட்ட முறையாக்கப்பட்ட விஷயங்களில், அந்த நிலங்களில் உள்ள ம்ரங்கள்மீது பஞ்சாயத்துக்கோ, பஞ்சாயத்து யூனியனுக்கோ உரிமை கிடையாது. ஆல்ை, அந்த உரிமை தள்ளுபடி செய்யப்பட்டாலும், உரிமை நீக்கப்பட்டாலும் அந்த மரங் களின்மீது பஞ்சாயத்துகளுக்கு உரிமை உண்டு. நிலம் எந்த வகையில் உள்ளதோ, அந்த அடிப்படையில், இந்த உத்தரவில் உள்ள விதி முறைகளின்படி அந்த உரிமை உண்டு.