31 சட்டத்தை அனுசரித்து, ஒரு தலைவர் நடக்கவில்லையாளுல் அரசாங்கம் அவரைப் பதவியிலிருந்து விலக்கி விடலாம். தமக்குள்ள அதிகாரத்தை ஒரு தலைவர், துஷ் பிரயோகம் செய்தாலும் அரசாங்கம் அவரைப் பதவியிலிருந்து நீக்கி விடலாம். தலைவர் தாமாகவே தமது பதவியை ராஜிநாமா செய்ய லாம். அப்படிச் செய்யும்போது ராஜிநாமாவை எழுத்து மூலம் பஞ்சாயத்தில் வைத்து, அதன் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். 16. பதவியிலிருந்து தலைவரை நீக்குவது எப்படி ? ஒரு பஞ்சாயத்தின் தலைவர் தமது கடமையை வேண்டும் என்றே நிறைவேற்றத் தவறுகிருர் அல்லது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிருர் என்று வைத்துக் கொள்வோம். அவரை அப்படியே விட்டுவிடலாமா? கூடாதல்லவா ? கீழ்க் கண்ட முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் அவரைப் பதவி யிலிருந்து விலக்கலாம். இன்ஸ்பெக்டர், மேற்படி தலைவருக்கு அவர் செய்த தவறுதல்களைக் குறிப்பிட்டு அதற்கு விளக்கம் தரும்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேற்படி நோட்டீஸ்"க்கு தலைவர் தரும் விளக்கம் இன்ஸ்பெக்டருக்கு திருப்தியளிப்பதாக இருந்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிடுவார். விளக்கம் திருப்திகரமாக இல்லை அல்லது விளக்கமே தரவில்லை என்ருல் என்ன செய்வது? நோட்டீசையும், அதற்கு தலைவர் விளக்கம் எழுதி அனுப்பியிருந்தால் அதையும், தலைவரைப் பதவியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையையும் சம்பந்தப்பட்ட தாசில் தாருக்கு இன்ஸ்பெக்டர் அனுப்பிவைக்க வேண்டும். தாசில்தார். இதுபற்றி யோசிக்க மேற்படி பஞ்சாயத்தின் கூட்டம் ஒன்றை ஒரு வார நோட்டீஸ் கொடுத்துக் கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்துக்கு தாசில்தாரே தலைமை வகிக்க வேண்டும். அவர், விலக்க வேண்டிய தலைவர் பற்றிய நோட்டீஸ், விளக்கம், பிரேரணை ஆகியவற்றையும் படிப்பார்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/67
Appearance