185 அவசியம். புதிய சட்டத்தின் 2 (34) பிரிவின்கீழ், (பழைய சட்டத்தின் 2 (24) பிரிவுக்கு இது நிகரானது.) ஒதுக்கப் படாத காடுகள் என்பது, 1882-ம் ஆண்டு சென்னே காடுகள் சட்டத்தின் 4-வது பிரிவின்கீழ் அறிவிக்கப்படாத காடு என பொருள் விளக்கம் கூறப்பட்டுள்ளது. மேலும், இதில் அரசாங்கத்தின் கீழுள்ள ஒதுக்கப்படாத நிலம் என்பதும் அடங்கும். அரசாங்கத்தின் கீழ் உள்ள நிலம் என்பதில், அனுபோகத்தில் இல்லாத நிலங்கள் எல்லாம்-அவை தீர்வை விதிக்கப்பட்டதாக இருப்பினும் விதிக்கப்படாததாக இருப்பினும்-அடங்கும். ஆனால், தனிப்பட்ட நபர்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்கள் இதில் அடங்காது. ரெவின்யு கணக்குகளில் 'புறம்போக்குகள்’’ என்று வகைப்படுத்தப் பட்டுள்ள நிலங்கள், அவை எந்தக் காரியத்திற்காக அவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளனவோ, அந்தக் காரியங் களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ள நிலங்கள் என்று கருதப்பட வேண்டும். (காட்டுப் புறம்போக்குகள் அல்லாத)அத்தகைய நிலங்கள் அனேத்தையும் அரசாங்கத்தின் கீழுள்ள ஒதுக்கப் படாத நிலங்கள் என கருதக்கூடாது. தீர்வை விதிக்கப் பட்ட, விதிக்கப்படாத, தரிசு நிலங்களும் உள்ளன. தீர்வை விதிக்கப்பட்ட தரிசு நிலங்கள் நிரந்தர அடிப்படையில் பங்கீடு செய்யப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆகும். ஆகவே, தீர்வை விதிக்கப்பட்ட தரிசு நிலங்களே பஞ்சா யத்தில் நிலைபெற்றுள்ள ஒதுக்கப்படாத காடுகள் என்று கருதக்கூடாது. மேற்படி சட்டத்தின் ஆரம்ப தேதியன்று 1882-ம் ஆண்டு சென்னே காடுகள் சட்டத்தின் கீழ் ஒதுக்கப் பட்டிராதவையும், ரெவின்யு கணக்குகளில் காட்டுப்புறம் போக்கு அல்லது தீர்வை விதிக்கப்படாத தரிசு நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு இருப்பவையுமான அனுபோகத் தில் இல்லாத நிலங்கள் அனைத்தையும் மேற்படி சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளில் நிலத்துள்ள ஒதுக்கப் படாத நிலங்கள் என்றே கருத வேண்டும். இந்த வகை யைச் சேர்ந்துள்ளவையும், ஒவ்வொரு பஞ்சாயத்து-பட்ட ணத்தின் எல்லேக்குள் உள்ளவையுமான நிலங்கள் அனைத் தையும் கண்டு பிடித்து, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வா கத்தின்கீழ் வைப்பது அவசியமாகும். அதற்குப் பிறகு அந்தச் சொத்துக்களைப் பஞ்சாயத்து நிர்வகிக்கும். 4. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள புறம்போக்குகள் பழைய சட்டத்தின் 0ே (2) பிரிவின் கீழ், நிர்ணயிக்கப் பட்ட வரையறைகளுக்கும் மேல் விசாரணைக்கும் உட்பட்டு HIH–13
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/672
Appearance