பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 9. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள சொத்துக்களின் பட்டியல் பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள சொத்துக்களின் பட்டியல் கர்ணம், அசல்-நகல் பிரதியில் தயாரிக்க வேண்டும். இந்தப் பட்டியலின் குறிப்புகள்’ என்ற பத்தியில் பட்டியல் தயாரித்த காலத்தில் சொத்துக்களே ஆக்ரமித்துள்ளவர்களின் பெயர்களைக் குறிக்க வேண்டும். ரயத்து வாரிப் பிரதேசத் தைச் சேர்ந்த பிர்க்கா ரெவின்யு இன்ஸ்பெக்டரும், 1948-ம் ஆண்டு சென்னை எஸ்டேட்டுகள், (அழித்து விடுதல்-ரயத்து வாரியாக மாற்றுதல்) சட்டத்தின்கீழ் நிலவரித் திட்ட ஏற்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத பிரதேசங்களின் விஷ யத்தில் துணேதாசில்தார் பதவிக்குக் குறையாத பதவி வகிக் கும் எஸ்டேட் மானேஜர் அல்லது உதவி மானேஜர், மேற் சொன்ன பட்டியல் சரியானது என்று சான்று அளிக்க வேண்டும். இந்த புறம்போக்குகளில் மரங்கள் இருப்பின், அவற்றை மரப் பட்டா உரிமையின்கீழ் வைத்திருக்கலாம்; அல்லது அவற்றின் பலனே அனுபவிக்கும் உரிமையை ஒவ்வொரு பசலி ஆண்டுதோறும் விற்றுவிடலாம். கர்ணம், ஒவ்வொரு வகையைச் சேர்ந்த மரத்திற்காகவும் தனிப்பட்ட பட்டியலை அசல்-நகல் பிரதியில் தயார் செய்ய வேண்டும். இந்தப் பட்டியல்களே ரயத்துவாரிப் பிரதேசத்திலுள்ள ரெவின்யு இன்ஸ்பெக்டர்கள் அல்லது 1948-ம் ஆண்டு சென்னே எஸ்டேட்டுகள் (அ ழி த் து விடுதல், ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டத்தின்கீழ் நிலவரி திட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்படாத எஸ்டேட்டு பிரதேசங்களின் விஷ யத்தில் எஸ்டேட் மானேஜர் அல்லது உதவி மானேஜர் அங்கீகரிக்க வேண்டும். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, ரெவின்யு இன்ஸ்பெக்டர், எஸ்டேட் மானேஜர், அல்லது உதவி மானேஜர் இது குறித்து வெளியிடப்படக்கூடிய விசேஷ உத்தரவுகளே ஒட்டி மேற்சொன்ன பட்டியல்களைப் பரிசீலனே செய்ய வேண்டும். - மர வரி ஏற்பாட்டின்கீழ் வராத இதர மரங்கள் குறித்த பட்டியலின் உதவிகொண்டு பஞ்சாயத்து அவை குறித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். மர வரி ஏற்பாட்டின் கீழ் வரும் மரங்கள், ரெவின்யு கணக்குகளின்கீழ் வரும். இத்தகைய மரங்களின் பட்டியல் ஒன்று, தகவலுக்காகப் பஞ்சாயத்துகளுக்கு அனுப்பப்படும்.