193 தின் பொறுப்பில் இருந்தால், என்ன ஏற்பாடுகள் செய்யப் பட வேண்டும் ? முடிவு.-கிராமப் பஞ்சாயத்துக் காரியதரிசியின் கடமை கள் என குறிப்பிட்டுள்ள கடமைகள் தவிர, மற்றெல்லாக் கடமைகள் விஷயமாகவும் தமது எல்லேப் பொறுப்பிலுள்ள கிராமப் பஞ்சாயத்துக்கு உதவி செய்ய வேண்டும். கிராமப் பஞ்சாயத்துக் காரியதரிசியின் அலுவலைச் செய்ய இரண்டு கர்ணங்களில் எவருடைய சேவையை வேண்டுமானலும் பஞ்சாயத்து பெற்றுக்கொள்ளலாம், அல்லது வேறு விசேஷ ஏற்பாடுகளேத் தானே செய்துகொள்ளலாம். . கேள்வி 8.-ஒரு ரெவின்யு கிராமத்தில், ஒரு பஞ்சாயத் துக்குமேல் இருந்தால், கிராம அதிகாரி அதிகப்படியான பஞ்சாயத்து படி பெற உரிமை உள்ளவரா? முடிவு.-இத்தகைய விஷயங்களில் அதிகப்படியான படி அளிக்கக்கூடாது. கிராம அதிகாரியின் பொறுப்பிலுள்ள மொத்த எல்லே அளவை அனுசரித்து, அவருக்குக் கொடுக் கத்தக்க பஞ்சாயத்து அபிவிருத்திப் படியின் அளவை நிர்ண யிக்க வேண்டும், கேள்வி 4.-பல ரெவின்யு கிராமங்கள் ஒரு பஞ்சா யத்தில் சேர்ந்திருந்தால், பஞ்சாயத்து அபிவிருத்திப் படியை, பல கிராமங்களின் கிராம அதிகாரிகளிடையே பகிர்ந்து அளிக்க வேண்டுமா? முடிவு.-தம்முடைய சொந்த எல்லே பொறுப்பளவுக்கு ஒவ்வொரு கிராம அதிகாரியும் தமக்கு உரித்தான பஞ்சா யத்து அபிவிருத்திப் படியைப் பெறலாம். எனவே, ஒரு படியை ஒருவருக்கு மேற்பட்ட அதிகாரிகளிடையே பகிர்ந் தளிப்பது என்ற பிரச்னேயே எழுவதற்கில்லே. கேள்வி 5.-இரண்டு அல்லது பல மணியக்காரர் இருக் கும் கிராமத்தில், கொடுக்கப்பட வேண்டிய படியின் அளவு என்ன? - முடிவு.-இந்தக் கேள்விக்குப் பதில், மணியக்காரர், கூட்டு (அல்லது உதவி) மணியக்காரர் எல்லேப் பிரதேசப் பொறுப்பு பிரிக்கப்பட்டிருக்கிறதா இல்லேயா என்பதைப் பொறுத்திருக்கும். அப்படி எல்லேப் பொறுப்பு பிரிக்கப்பட் டிருந்தால், அந்த மணியக்காரருடைய பொறுப்புகள் இயல் பானவையா, லகுவானவையா என்பதைப் பொறுத்து
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/680
Appearance