197 கர்ணத்திடம் ஒப்படைக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யப் பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு. கேள்வி 13.-கிராம அதிகாரிகள் வைத்துவர வேண்டிய பதிவேடுகளும் பதிவுக்கட்டுகளும் யாவை? முடிவு.-தீர்வை நிர்ணயப் பதிவேடுகளே வைத்து வருவது பற்றிய விளக்கக் குறிப்புகள் ஏற்கெனவே இருக் கின்றன. இப்போதுள்ள பதிவுக் கட்டுகளேயும் பதிவேடு களேயும் பரிசீலனே செய்து, எவற்றை மாற்ற வேண்டும் என்பதை சிபாரிசு செய்ய ஒரு கமிட்டி நியமிக்கப்படுகிறது. கமிட்டியின் அறிக்கை கிடைத்து அதைப் பரிசீலனே செய்த பிறகு, கிராமப் பதிவேடுகள், பதிவுக்கட்டுகள் ஆகியவற்றில் எவற்றை எதிர்காலத்தில் வைத்து வர வேண்டும் என்பது குறித்து விளக்கக் குறிப்புகள் பிறப்பிக்கப்படும். - கேள்வி 14.-தீர்வை நிர்ணயப் பதிவேடு பஞ்சாயத் திடம் இருக்கவேண்டுமா? கர்ணத்திடம் இருக்க வேண்டுமா? வரவேண்டிய வசூல்-நிலுவையைக் காட்டும் அறிக்கை ஒன்றைக் கர்ணம் அளிப்பது போதுமானதா? முடிவு.-பதிவேடுகளும் மற்றப் பதிவுக்கட்டுகளும் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்திருக்கப்பட வேண்டும். அவை கர்ணத்திடம் இருக்கக்கூடாது. வரவேண்டியவசூல்-நிலுவை அறிக்கை ஒன்றையும் கர்ணம் தயாரித்துப் பஞ்சாயத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். கேள்வி 15.-குறிப்பிட்ட கால வரையறைக்குள் வசூல் செய்யப்படாத ரெவின்யு இனங்கள் சம்பந்தப்பட்ட வரையில், பஞ்சாயத்து தலைவர்மீது சர்சார்ஜ் விதிக்கலாமா? முடிவு.-பஞ்சாயத்துக்குச் சேரவேண்டிய பல்வேறு வருமானங்களே வசூல் செய்யும் பொறுப்பு மணியக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவற்றை விடாது வசூல் செய்யும் பொறுப்பு மணியக்காரரையே சேர்ந்ததாகும். எனவே, வசூல் செய்வதில் ஏற்படும் குறைபாடுகளினுல் உண்டாகும் நஷ்டத்துக்கு நிர்வாக அதிகாரி (பஞ்சாயத்துத் தலைவர்) பொறுப்பாளி ஆகமாட்டார். ஆனால், வசூல் செய்யும் வேலையை மணியக்காரரிடம் ஒப்படைக்க மறுத்து விட்டு, பஞ்சாயத்துத் தலைவரே அதை மேற்கொண்டு செய்யும்போது, மேற்குறித்த சலுகை பஞ்சா யத்துத் தலைவருக்கு இருக்காது. அத்தகைய விஷயங்களில்,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/684
Appearance