உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நிர்வாக அதிகாரி என்ற முறையில் பஞ்சாயத்துத் தலைவர் மீது சர்சார்ஜ் விதிக்கலாம். கேள்வி 16.-கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அதிகாரிகளுக்குப் பஞ்சாயத்து அபிவிருத்திப் படி அளிக்கப்பட வேண்டுமா? முடிவு.-அளிக்கப்பட வேண்டியதில்லே. இந்தப் படி, பகுதி நேர கிராம அதிகாரிகளுக்கு மட்டும்தான். கன்னியா குமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டை தாலூகா ஆகியவற்றிலுள்ள கிராம அதிகாரி கள் முழுநேர அரசாங்க ஊழியர்கள் ஆவர். எனவே, அவர்களுக்கு இந்தப் படி கிடையாது. - கேள்வி 17 -ட்ரியூன் அதிகாரி (கர்ணம், மணியக் காரர், முன்சீபு ஆகிய மூன்று அதிகாரிகள்) செய்யும் அரசாங்க அலுவல்களே ஒருவராகவே செய்யக்கூடிய கிராம அதிகாரியின் அலுவல்கள் யாவை? அவர் பெற உரிமையுள்ள படிகள் யாவை? முடிவு.-644-ம் எண் அரசாங்க உத்தரவின்கீழ் கர்ணத்திற்கும் மணியக்காரருக்கும் வகுத்துக் கொடுக்கப் பட்டுள்ள கடமைகளே ட்ரியூன் அதிகாரி செய்ய வேண்டும். கர்ண்த்திற்குக் கொடுக்கப்படும் படிகள் இவருக்கும் அளிக் கப்படலாம்; அதாவது, அவருடைய பொறுப்புகள் இயல் பான பொறுப்புகளா, லகுவான பொறுப்புகளா என்பதைம் பொறுத்தும் பஞ்சாயத்துக் காரியதரிசியின் அலுவல்களே அவர் செய்கிருரா இல்லேயா என்பதைப் பொறுத்தும் அவருக்கு 15, 12 அல்லது 10 ரூபாய் அளிக்கப்படலாம். (G. O. No. 441. L. A. and R. D. 15-2-1961) 83. பஞ்சாயத்துகளில் கும்ாஸ்தா வேலைகளைச் செய்தல் பகுதி நேர குமாஸ்தாக்கள் நியமனம், சம்பளம், - படி முதலியன கிராம அபிவிருத்தித் துறையின் 1960-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ம் தேதியுள்ள அரசாங்க உத்தரவு எண் 644-ல் 10-வது பாராவில், கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகளேத் தயாரித்தல், வரவு செலவுகள் பற்றிய ரொக்க சம்பந்தமான கணக்குகளேப் பராமரித்தல் உள்பட பொது நிர்வாக சம்பந்தமான குமாஸ்தா வேலேகளேச் செய்வதற்காக, அந்த