பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 செயலாற்றும். இந்த அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, மேலும் குறிப்பிடத்தக்க பொறுப்புகள், பஞ்சாயத்து களிடம் அளிக்கப்பட்டுள்ளன. உணவு-விவசாயத் துறையின் 1960-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதியுள்ள அரசாங்க உத்தரவு எண் 3792-ல், கிராமத்திற்கான உணவு உற்பத்தித் திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்துகின்ற பொறுப்பு, பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிராம அபி விருத்தி-ஸ்தல நிர்வாகத் துறையின் 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதியுள்ள அரசாங்க உத்தரவு எண் 972-ல், பஞ்சாயத்துகளின் உபயோகத்திற்காக அரசாங் கத்தின் வசம் உள்ள பொது நிலங்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கிராம அபிவிருத்தி ஸ்தல நிர்வாகத் துறையின் 1961-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதியுள்ள அரசாங்க உத்தரவு எண் 1550-ல், அரசாங்கத்துக்குச் சொந்தமான மரங்கள், பராமரிப்புக்காக பஞ்சாயத்துகளிடம் விடப்பட்டுள்ளன. அத்துடன் மேற்கொண்டும் மரங்கள் நட்டு அபிவிருத்தி செய்யும் வேலே, பஞ்சாயத்துகளின் பொறுப்புகளில் ஒன்ருகும். கிராம அபிவிருத்தி ஸ்தல நிர்வா கத்துறையின் 1961-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதியுள்ள அரசாங்க உத்தரவு எண் 1870-ல், மீன் வளங்களே ஏலம் விடுகின்ற வேலையும் பஞ்சாயத்துகளிடம் விடப்பட்டுள்ளன. பிரதேசங்களில் கிடைக்கும் மீன் வளச் செல்வத்தை மேலும் விரிவான முறையில் பெருக்க வேண்டிய வேலேயைப் பஞ்சாயத்துகள் ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டும். (2) அரசாங்க உத்தரவு எண் 644-ன் 7-வது பாராவில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி, கிராமப் பஞ்சா யத்துகள் திட்டமிடும் அதிகாரம் பெற்ற ஸ்தாபனங்களாகப் பணியாற்றும் வேலேகளில் கிராம அதிகாரிகள் அவற்றுக்குத் தங்களுடைய ஒத்துழைப்பை அளிக்க வேண்டியதாகிறது. அத்துடன் அவர்கள், மேலே முதல் பாரா வில் சொல்ல்ப் பட்டுள்ள கிராமப் பஞ்சாயத்துகளிடம் நிலேபெற்றிருக்கும் மறற வேலைகளிலும் அவைகளுக்கு ஒத்துழைப்பை அளிக்க வும் வேண்டியதாகிறது. அரசாங்க உத்தரவு எண் 644-ன் 9-வது பாராவில், பஞ்சாயத்துகளின் வரி வசூல் வேலைகளில் அவறுறுககு வேண்டிய ஒத்துழைப்பை கிராம அதிகாரிகள் அளிப்பது அவர்களுடைய ஆன்ருடி ஆலுவல்களில் சேர்ந் தவை யாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் கிராமக் கர்ணம் செய்ய வேண்டிய ಙ್ಞT வேலைகளையும் அவர் செய்து வரும்போது அவர் கீழ்க்கண்டவற்றிற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்: