பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 (i) அவருடைய வேலேகள் சாதாரணமானவை' யாக இருந்தால், மாதத்திற்கு 15 ரூபாய். (ii) அவருடைய வேலைகள் லகுவானவை'யாக இருந்தால், மாதத்திற்கு 12 ரூபாய். 1961-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அளிக்கப்பட வேண்டிய 1961-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான பஞ்சாயத்து அபிவிருத்தி படிகளும் அதற்குப் பிறகு எல்லா மாதங்களுக்குமான படிகளும் இந்த விகிதத்தில் பெறப்பட்டு, விநியோகிக்கப்பட வேண்டும். ()ே கிராமப் பஞ்சாயத்து பகுதி நேர குமாஸ்தாவின் வேலேகளேயும் கர்ணத்திடம் அளிக்கப் பிரியப்பட்டால், அந்த வேலைகளே ஏற்றுச் செய்ய கிராமக் கர்ணத்திற்கும் சம்மதம் இருந்தால், அந்த சந்தர்ப்பங்களில், கிராமக் கர்ணம் அந்த வேலேகளேச் செய்யவும், பஞ்சாயத்தால் அந்த வேலேக்காக நிர்ணயிக்கப்படுகிற படித் தொகையை பெற்றுக் கொள்ளவும் கிராம கர்ணத்திற்கு, சம்பந்தப்பட்ட ரெவின்யு டிவிஷனல் அதிகாரி அனுமதி அளிக்கலாம். அப்படி அளிக்கப்படுகிற படி தனியாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தரவின்படி பஞ்சாயத்துக் குமாஸ்தாக் களுக்காக என்று வரையறுக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்சத் தொகை அளவுக்குமேல் போகக்கூடாது. அவை, பஞ்சா யத்து நிதிகளிலிருந்து அளிக்கப்படவேண்டும். பஞ்சா யத்துகள் கிராமக் கர்ணங்கள் இவர்களிடையே ஏற்படு கின்ற ஒரு உடன்பாட்டின் விளைவாக செய்யப்படுகின்ற இப்படிப்பட்ட ஏற்பாடுகள், அரசாங்க நிதிகளிலிருந்து பஞ்சாயத்து அபிவிருத்திப் படியாக கொடுக்கப்படுகின்ற தொகை அளவை எந்த வகையிலும் பாதிக்காது. [G.O. No 2340. R. D. and L.A. 28-8-1961] 85. கிராம வீட்டு வரி இணை மானியம் கிராம வீட்டு வரி இனே மானியத்தைச் செலுத்துவது சம்பந்தமான சில விஷயங்களே விளக்கி அரசாங்கத்தார் கீழ்க்கண்ட உத்தரவுகளேப் பிறப்பித்துள்ளார்கள். 2. கிராமப் பஞ்சாயத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய மானியத்தொகை ஒவ்வொரு ஆண்டும் எவ்வாறு விதிக்கப்பட்டு செலுத்தப்படுகிறது? வசூலிக்கப்படும் வீட்டு வரித் தொகையை ஒட்டி, கிராம வீட்டு வரி இனே மானியம் செலுத்தப்படத் தக்க