பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

散 இந்த நிலையில் ஆங்கிலச் சட்ட வாசகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது எளிதில் இயலாததாகும். ஆங்கி லத்திலுள்ள சட்டக் கலைச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களே ஆக்குவதற்குச் சிறந்த சட்ட அறிவோடு தமிழ் மொழிப் புலமையும் வேண்டும். சட்டக் கருத்துக்களேத் தமிழில் எழுதுவதற்குத் தனிப் பயிற்சியும் திறனும் வேண்டும். இத்தகைய இடர்ப்பாடுகளைக் கண்டு அயர்ந்து ஆங்கி லத்தில் இயற்றப்பெறும் சட்டங்களேத் தமிழில் ஆக்காமல் விட்டுவிட்டால் தமிழ் மட்டுமே தெரிந்த மக்கள் அச் சட்டங்கள் பற்றி அறிந்துகொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. ஆஅதிலும் பொதுமக்களின், முக்கியமாகக் கிராம மக்களின், அன்ருட வாழ்வுடன் தொடர்பு கொண் டுள்ளது பஞ்சாயத்து நிர்வாகச் சட்டமுறை. எனவே, அதுபற்றிய சட்டங்களும், விதிகளும் தமிழில் எழுதப்பெறுவது இன்றியமையாததாகும். பஞ்சாயத்து நிர்வாகம் சம்பந்தப்பட்ட சட்டங்களேயும் விதிகளையும் கொண்ட இந்நூல் எளிய தமிழில் யாவருக்கும் விளங்கக்கூடியதாக அமைந்துள்ளது. இந்நூலேத் தமிழில் ஆக்கியுள்ள திரு. முல்லே. பி. எல். முத்தையா அவர்களேயும் நல்ல முறையில் வெளியிடும் ஸ்டார் பிரசுரத்தாரையும் பாராட்டுகிறேன். மா. அனந்தநாராயணன்