34 bar கோரம் இல்லாததால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக தலைவர் அறிவிக்கலாம். சில சந்தர்ப்பங்களில், கீழ்க்கண்டவாறு நேரிடலாம். கூட்ட ஆரம்பத்தில் கோரம் இருக்கலாம். மத்தியில் யாராவது எழுந்து வெளியே போய்விட்டதின் காரணமாகக் கோரம் இல்லாமல் போய்விடலாம். உடனே தலைவர், வெளியே சென்ற அங்கத்தினரைக் கூப்பிட்டு கோரம் ஏற்பட்ட பிறகே மேற்கொண்டு கூட்டத்தை நடத்த வேண்டும். கூட்டம் நடக்கும்போது கோரம் இருக்கிறதா என்பதைத் தலைவர் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். அங்கத்தினர்கள்கூட, கோரம் இல்லாததைத் தலைவ ருடைய கவனத்துக்குக் கொண்டு வரலாம். 21. பஞ்சாயத்துக் கூட்டத்தைக் கூட்டுவது எப்படி? பஞ்சாயத்துக் காரியாலயத்துக்காக ஒரு இடம் இருக்க வேண்டும். பஞ்சாயத்து அலுவல்களை அந்த இடத்திலேதான் கவனிக்க வேண்டும். கூட்டம் அடிக்கடி நடைபெற வேண்டும். ஒரு கூட்டத் துக்கும் இன்னெரு கூட்டத்துக்கும் இடையே அறுபது நாட் களுக்கு மேல் போகக்கூடாது. கூட்டம் நடைபெறும் தேதி, காலம், கூட்டத்தில் கவனிக்க வேண்டிய அலுவல்கள்-இவை பற்றி முன்னதாகவே அங்கத்தினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் மூன்று நாட்கள் முன்னதாகவே கூட்டம் பற்றிய நோட்டிசைக் கொடுத்துவிட வேண்டும், ஆப்படி இல்லையாளுல் அந்தக் கூட்டத்தை நடத்தக்கூடாது. 22. கூட்டங்களுக்கான நோட்டீஸ் கொடுப்பது எப்படி? கூட்டத்திற்கான நோட்டிசை அங்கத்தினர்களிடம் நேரில் கொடுக்கலாம். அல்லது யார் மூலமாவது அனுப்பி ఫ్రశ&3; థUFTLD. அங்கத்தினர் வீட்டில் இல்லாவிட்டால் அந்த வீட்டி லுள்ள பொறுப்பான ஒருவரிடம் நோட்டிசைக் கொடுத்து அவர் வந்ததும் கொடுக்கச் சொல்லலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/70
Appearance