பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 எண்ணே மேற்படி ரசீதில் குறிப்பார்; (iv) ரசீதில் முத்திரை யிடுவார். பின்னர் மேற்படி ரசீதைப் பஞ்சாயத்து யூனியன் மானேஜருக்கு அனுப்ப வேண்டும். பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக ரசீதில் கையொப்பமிட்டு, வரவு களுக்கான எண்கள் குறிப்புப் புத்தகத்தில் அந்த ரசீதின் எ ண் னே க் குறித்துக்கொள்வதோடு, பெற்றுக்கொண்ட தொகையையும் குறித்துக்கொள்ள வேண்டும். அந்த ரசீதின் மூலப் பிரதியைப் பணம் செலுத்தியவரிடம் திருப்பித் தர வேண்டும். மேற்படி ரசீதுகள் அந்த நாளுக்கான கணக்கு கள் முடியும் நிலையில் மானேஜர், அக்கெளண்டெண்ட் ஆகியோரின் கைப்புத்தகம், எண்கள் குறிப்புப் புத்தகங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட பின்னர், முடிவாக மற்றெரு பிரதியை அக்கெளண்டெண்டிடம் கொடுக்க வேண்டும். அவர், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக் கணக்கில், அ வ ரு ைட ய பேரேட்டில் வரவு வைக்க வேண்டும். அது கிராமப் பஞ்சாயத்துத் தொகுப்பு நிதி எண் 5 நமூனப்படி வைத்து வரப்படும். 7. பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பட்டுவாடா உத்தரவு கொடுக்கப்படும்போது, முதலில் அதை அக்கெளண் டெண்ட் பெற்றுக்கொள்ளவேண்டும். அவர், பஞ்சாயத்துக் கணக்கில் போதுமான தொகை வரவில் உள்ளதா என்றும், பஞ்சாயத்துத் தல்ேவரின் கையொப்பம் பஞ்சாயத்து ஆனியன் அலுவலகத்தில் உள்ள மாதிரியுடன் ஒத்துள்ளதா என்றும் சரி பார்ப்பார். கிராமப் பஞ்சாயத்துத் தொகுப்பு நிதி எண் 6 நமூனப்படி வைத்து வரக்கூடிய எண்கள் குறிப்புப் புத்தகத் தில் உள்ள எண்ணுக்குத் தொடர்புள்ள ஒரு எண்ணேப் பட்டுவாடா உத்தரவுக்கு இடுவார். அவர், கொண்டு வரு வோரின் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டும், அடையா ளத்தை கண்டுகொண்டும் ஆனபிறகு, பட்டுவாடா உத்தர வின் பின்புறம் அங்கீகார உத்தரவை எழுத வேண்டும். பின்னர் மேற்படி பட்டுவாடா உத்தரவை பஞ்சாயத்து யூனியன் மானேஜரிடம் கொடுக்கப்படும். அதில் அவர் கையொப்பமிட வேண்டும்; பட்டுவாடா செய்வதற்கான அவ ருடைய எண்கள் குறிப்புப் புத்தகத்தில் (V P.C. நமூன எண் 6) உள்ள எண்ணுக்குத் தொடர்புள்ள ஒரு எண்ணே பட்டுவாடா உத்தரவு நமூனுவில் குறிக்க வேண்டும். பின்னர், பணம் கொடுப்பதற்காக காஷியரிடம் மேற்படி பட்டுவாடா உத்தரவு கொடுக்கப்பட வேண்டும். பட்டுவாடா உத்தரவிலேயே கொண்டு வருவோரிடம் அவரது ஒப்புதலே அங்கீகரித்துக்கொண்டு, அவரிடம் காஷியர் அந்தத்