உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திட்டத்தை செம்மையான முறையில் நடத்தி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு பாடுபட .ே வ ண் டு ம் என்பதை அரசாங்கம் வலியுறுத்த ஆசைப்படுகிறது. இதற் காக, மூன்ருவது திட்ட காலத்திற்கு என்று ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வட்டார அளவில் வரவு-செலவுத் திட்டத்தை நிச்சயிப்பது அவசியமாகிறது. வட்டார அபி விருத்தித் திட்டங்கள் வட்டார வரவு-செலவு திட்ட வரம் புக்குள் அடங்க வேண்டியதும் அவசியமாகிறது. 8. அப்படி மூன்ருவது ஐந்தாண்டுத் திட்ட வேலேயில் தீவிரமாகக் கலந்து பாடுபடவேண்டும் என்பதற்கு அத்தியா வசியமான அம்சமாக வட்டார அளவில் பஞ்சாயத்து யூனியனின் பொதுவான ஆலோசனைகளேயும் ஒத்துழைப் பையும் பெற்று, ஒவ்வொரு பஞ்சாயத்தும், அந்தந்தப் பிரதேசத்துக்கு திட்டமிட்டு, பணிபுரியும் அதிகாரம் பெற்ற ஒரு நிறுவனமாக செயலாற்ற வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்த விரும்புகிறது. விவசாய அ பி வி ரு த் தி த் திட்டத்தில் ஆண்டு வாரியாக ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும்படியான வகையில் எல்லா வகையான நடவடிக்கைகளேயும் அவை எடுக்க வேண்டும். விவசாய உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் துறையில் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனி யன்கள் இந்தத்துறையில் பணியாற்றுவதற்கு வசதியாக, அரசாங்கம், எல்லாப் புறம்போக்கு, தரிசு நிலங்களின் (சில் குறிப்பிட்ட வகைகளேத் தவிர) பராமரிப்பையும் நிர்வகித் தலையும் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்களுக்கு மாற்றும்படியாக உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அது மட்டுமல்லாமல், குடி மராமத்து வேலேகள் சம்மந்தப்பட்ட உரிமைகளேயும் அவைகளேப் பராமரிக்கும் பணியையும் பஞ்சாயத்துகளிடம் ஒப்படைத்து அதற்கான அதிகாரங் களும் அவைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. சிறிய நீர்ப் பாசன வேலைகள் பஞ்சாயத்து யூனியன்களிடம் ஒப்படைக்கப் படும். 4. இந்த முக்கியமான புதுப் பொறுப்புகளே பஞ்சா யத்துகளும், பஞ்சாயத்து யூனியன்களும், ஏற்று நடத்தும் வேலேயில், உதவும் முறையில் பயிற்சிபெற்ற சிப்பந்திகளின் சேவை அவைகளுக்குக் கிடைக்கும்படிச் செய்யவேண் டியது அவசியமாகிறது. பஞ்சாயத்து யூனியன்களைப்