பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 பொறுத்த வரையில், இந்த வகையில் ஒன்றும் சிரமம் இல்லே. சீக்கிரத்தில் மாவட்டக் கழகங்கள் எடுபடப் போவதின் விளைவாக, வட்டார அபிவிருத்தி அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், குமாஸ் தாக்கள், கிராம சேவக்குகள் என்று சமுதாய நலத் திட்டத்தின்கீழ் பணி புரிந்துகொண் டிருப்பவர்களின் சேவையும் இன்னும் குமாஸ்தாக்களின் சேவையும் அவைகளுக்குக் கிடைக்க வழி இருக்கிறது. பஞ்சாயத்து யூனியன்களுக்குக் கிடைக்கின்ற ஊழியர்களின் சம்பள விகிதங்களின் நிர்ணயத்தைப்பற்றி கிராமநல, ஸ்தல நிர்வாகத் துறையினுல் உத்தரவுகள் தனியாகப் பிறப்பிக்கப் படும். இந்த அலுவலர்களின் செலவு அரசாங்கத்தினரால் முன்போலவே தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும். அவர் களுடைய சேவைகளும் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியனின் நிதிகளிலிருந்து செலவு செய்யப்படும் வகையில் இல்லாமல், இலவசமாக அவைகளுக்கு ஒப்படைக்கப்படும். 5. ஆனால், கிராம அளவில் பணிபுரிய இதுபோன்ற அலுவலர்களின் சேவை கிடைக்காது. ஏனென்ருல், அநேக மாக எல்லா சிப்பந்திகளும் வட்டார முழுமைக்கும்தான் சேர்த்துப் பணியாற்ற வேண்டியவர்கள், கிராம சேவக்குகள் குறைந்த பட்ச பொறுப்புக்களே ஏற்றுக்கொண்டிருந்தாலும், அவர்களும் கட்டுக்கோப்பாக உள்ள பல கிராமங்களேயும் சேர்த்து மொத்தமாக அலுவலாற்ற வேண்டியவர்கள். அவர்கள் முக்கியமாக விவசாயம் சம்பந்தப்பட்ட வேலை களில் தங்கள் கவனத்தைச் செலுத்துவார்கள். தற்சமயம் அவர்கள் செய்து வருகின்ற எழுத்து வேலேயானது, ஓரளவு குறைக்கப்பட வேண்டும். பஞ்சாயத்துக்கான மாமூலான நிர்வாக வேலைச் சுமையை அவர்கள்மீது சுமத்தக்கூடாது. ஆகவே, பஞ்சாயத்துகளிலும், பஞ்சாயத்து யூனியன் களிலும் கிராம் அளவில் நிர்வாக வேலே சரிவர நடக்க, அவைகளுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்பட வேண் டியது அவசியமாகிறது. கலெக்டர்கள், ரெவினியு டிவி ஷனல் அதிகாரிகள், அத்துடன் 1980-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதியன்று ஏற்படப் போகும் பஞ்சாயத்து னியன்களின் முதல் தொகுதியைச் சேர்ந்த 75 வட்டாரங் களின் பிரதிநிதிகளாக இருக்கும் மாவட்ட அபிவிருத்தி மன்ற உறுப் பினர் க ள் ஆகியோரிடம் அபிவிருத்திக் கமிஷனர் இந்த விஷயத்தைப்பற்றி கலந்து ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில்ை ஏற்பட்ட முடிவின் அடிப்படையில் அபிவிருத்திக் கமிஷனர் இந்தப் பிரச்னை