23i வேலேகளுக்காக அவர்களுக்குக் கூடுதல் ஊதியம் தரப்பட வேண்டும் என்ற கொள்கையை அரசாங்கம் கொள்கை யளவில் ஒத்துக்கொள்கிறது. பின்வரும் பாராக்களில், இந்தக் கடமைகள் விவரித்துக் கூறப்பட்டுள்ளன. 7. கிராம அபிவிருத்தித் திட்டம் புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் 68-வது பிரிவின்படி அபிவிருத்தி வேலைகளேப் பஞ்சாயத்து யூனியன்களிடம் ஒப்படைத்தால், அந்தத் துறையில் கிராம, வட்டார அளவில் நல்ல முறையில் திட்டம் வகுத்து வேலே செய்ய ஒரு திட்ட நிறுவனம் அமைப்பது தேவையாகிறது. குறிப் பிட்ட பஞ்சாயத்து யூனியன் கமிட்டியின் ஆலோசனையின் படியும், அதனுடைய ஒத்துழைப்பையும் பெற்று, கிராமப் பஞ்சாயத்து, கிராம அளவில் ஒரு திட்ட நிர்வாக ஸ்தாபன மாகச் செயலாற்றும். கிராமப் பஞ்சாயத்து, அப்படிப்பட்ட ஸ்தாபனமாக தன்னுடைய கடமைகளேச் செய்யும்பொழுது, கிராம அதிகாரிகள் அதற்குத் தங்களுடைய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்து எங்கெங்கு திட்ட ஸ்தாபனமாக வேலே செய் கிறதோ அங்கெல்லாம் அந்தப் பஞ்சாயத்தானது, கர்ணத் தையும், மணியக்காரரையும் பஞ்சாயத்தின் விசேஷ கூட்டங்களில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட விசேஷ கூட்டங்களில் கலந்து கொள்வது, கிராம அதிகாரிகளின் கடமைகளின் ஒரு பகுதி யாகக் கருதப்படும். அவர்கள் தங்களுடைய அனுபவத் தையும், அறிவாற்றலேயும் பஞ்சாயத்துக்கு அளிப்பதுடன், பஞ்சாயத்து தன்னுடைய கடமைகளேச் செய்வதில் அவர் களுடைய முழு ஒத்துழைப்பையும் தரவேண்டும், நடை பெறும் விவாதங்களில் அவர்கள் கலந்து கொள்ளலாமே தவிர, ஒட் அளிப்பதில் அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. குறிப்பு.--திட்டமிடும் காரியங்கள் சம்பந்தமான விசேஷ கூட்டங்களுக்குத்தான் இந்த ஏற்பாடு. பஞ்சாயத்துகளின் சாதாரணக் கூட்டங்களில் கிராம அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டியது இல்லே.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/708
Appearance